'திரும்ப வந்துட்டேன்னு சொல்லு... பப்ஜி டா!'.. வெறும் கேம் மட்டுமில்ல... இப்போ வேலைவாய்ப்போடு... 'ஸ்டைலா... மாஸா... கெத்தா... டபுள் தமாக்கா!'
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் தடைவிதிக்கப்பட்டுள்ள பப்ஜி விளையாட்டு மீண்டும் வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
செப்டம்பர் 2-ஆம் தேதி இந்திய அரசு 100க்கும் மேற்பட்ட சீன செயலிகளுக்கு தடைவிதித்தது.
தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில மணிநேரங்கள் அல்லது சில நாட்களுக்குள்ளேயே பெரும்பாலான செயலிகள் ப்ளே ஸ்டோரிலிருந்து காணாமல் போயின.
அதில் பிரபலமான ஆன்லைன் மல்டிப்ளேயர் விளையாட்டான பப்ஜியும் ஒன்று.
பப்ஜி விளையாட்டின் வன்முறை காரணமாகவும், நாட்டின் பாதுகாப்பை நிலைப்படுத்தவும் இதை நீக்குவதாக அறிவித்திருந்தது மத்திய அரசு.
அதிக பயனர்களைக் கொண்ட பப்ஜி செயலியை இந்தியாவில் நிலைப்படுத்த, தென்கொரிய நிறுவனமான பப்ஜி கார்ப்பரேஷன், சீன நிறுவனம் டென்சென்ட்டுடன் கொண்டிருக்கும் அனைத்து தொழில்முறை உறவுகளையும் விடுத்து, தாமே முழு பொறுப்பையும் ஏற்கும் என அறிவித்திருந்தது.
இந்நிலையில், ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டிருந்தாலும், ஏற்கெனவே தரவிறக்கம் செய்தவர்களுக்கு பப்ஜி பயன்பாட்டில் இருந்தது. இந்தியாவில் மட்டும் இந்த விளையாட்டை 50 மில்லியனுக்கு அதிமானோர் விளையாடி வந்தனர். ஆனால், ஏற்கெனவே பதிவிறக்கம் செய்தவர்களுக்கும் அக்டோபர் 30 முதல் இயங்காது என நிரந்தர தடை விதித்தது மத்திய அரசு.
இதற்கிடையே, இந்தியாவுக்கான பப்ஜியின் புதிய வெர்ஷன் வெளியாகும் எனத் தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும், இந்தப் புதிய வெர்ஷனில் டென்செண்டின் தலையீடு இருக்காது. முழுக்க முழுக்க தென் கொரியாவை சேர்ந்த பப்ஜி கார்ப்பரேஷன் நிறுவனம் இதை கையாளும்.
இதே போல, கொரியா, சீனா, தைவான், வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு பிரத்யேக பப்ஜி வெர்ஷன்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
புதிய வெர்ஷன் வெளியிடுவது மட்டுமல்லாமல், இந்தியாவில் பப்ஜிக்கு தனி அலுவலகம், 100 பேருக்கு மேல் வேலை, உள்ளூர் நிறுவனங்களுடன் கூட்டணி என பல்வேறு திட்டங்களுடன் புதிய அவதாரத்தில் பப்ஜி களமிறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ''பப்ஜி'யில் மலர்ந்த காதல்!'.. மாலையும் கழுத்துமாக... திருமணம் முடித்து வந்த காதல் ஜோடி!.. 90s kids Vs 2k kids!.. திருமணப் போட்டியில் முந்துவது யார்?
- "அடேய் பேராண்டி,, 'அக்கவுண்ட்'ல இருந்த 2 லட்சத்த காணோம் டா..." 'பேரன்' சொன்ன 'பதில்'... ஒரு 'நிமிஷம்' கதிகலங்கி போன 'தாத்தா'!!!
- மீண்டும் வருகிறதா பப்ஜி!?.. செம்ம ட்விஸ்ட்... பப்ஜி நிறுவனத்தின் 'மாஸ்டர் ப்ளான்'!.. இந்த முறை ஜாக்பாட் யாருக்கு தெரியுமா?
- இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்தின் விலை என்ன?.. எப்போது கிடைக்கும்?.. பிற நாடுகளில் 'இது' தான் நிலவரம்!
- PUBG உட்பட 118 சீன செயலிகளுக்கு தடை!!.. மத்திய அரசு அதிரடி!.. 'இது' தான் காரணம்!.. எந்தெந்த செயலிகள்?
- 'சோறு', 'தண்ணி'ன்னு ஒண்ணும் இல்லாம... தொடர்ந்து 'பப்ஜி' ஆடிய சிறுவன்... 'இறுதி'யில் சிறுவனுக்கு நேர்ந்த 'விபரீதம்'!!!
- 'இந்தியா'வில்... 'டிக்டாக்' 'ஆப்'பை தொடர்ந்து 'பப்ஜி'க்கும் 'ஆப்பு'??... அடுத்ததா 275 'சீன' செயலிகள் லிஸ்ட் ரெடி பண்ணிட்டாங்களாம்... அதிரடி 'திட்டம்' போடும் 'மத்திய' அரசு!!
- 'பப்ஜி விளையாடனும்...' 'நெட்பேக் காலி...' 'ரீசார்ஜ் செய்ய பணம் தராததால்...' சிறுவன் எடுத்த விபரீத முடிவு...!
- அடேய், என் 'பென்ஷன்' பணத்த என்னடா பண்ணி வச்சுருக்கே... 2 லட்ச ரூபா'வ காலி செய்த 'பேரன்'... தல சுத்தி நின்ன 'தாத்தா'!
- 'அப்படி என்ன டா பாத்த'... '16 லட்சத்தை காணோம்'... 'ஆன்லைன் கிளாஸ்க்கு மொபைல் கொடுத்த தாய்'... சிறுவனின் பதிலால் ஆடிப்போன மொத்த குடும்பம்!