மீண்டும் வருகிறதா பப்ஜி!?.. செம்ம ட்விஸ்ட்... பப்ஜி நிறுவனத்தின் 'மாஸ்டர் ப்ளான்'!.. இந்த முறை ஜாக்பாட் யாருக்கு தெரியுமா?
முகப்பு > செய்திகள் > இந்தியாபப்ஜி கேம் செயலியின் மொத்த கட்டுப்பாட்டையும் தென் கொரிய நிறுவனம் வாங்கயிருப்பதால் இந்தியாவில் மீண்டும் அந்த கேம் வர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய பயன்பாட்டாளர்களின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் இறையான்மை நலன் கருதி 118 மொபைல் செயலிகளுக்கு மத்திய தொழில்நுட்பத்துறை சமீபத்தில் தடை விதித்தது. இதில் பப்ஜி கேம் செயலியும் ஒன்று. சீன நிறுவனமான டென்செண்ட்டின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த பப்ஜி கேம் செயலியை, இந்தியாவில் 33 லட்சத்திற்கும் மேலானோர் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், திடீர் தடையால் அந்த கேமின் நிறுவனம் பெரும் இழப்பை சந்தித்தது. எனினும், பப்ஜி இன்னும் இந்திய பயன்பாட்டாளர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அது விரைவில் பயன்படுத்தமுடியாத நிலைக்கு வரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக மத்திய தொழில்நுட்பத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இந்தியாவில் மீண்டும் அதிகாரப்பூர்வ இடத்தை பிடிப்பதற்கு பப்ஜி கார்ப்ரேஷன் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதற்காக தங்கள் செயலியின் கட்டுப்பாடுகள் முழுவதையும் சீன நிறுவனமான டென்செண்ட்டிடம் இருந்து மாற்றி, தென் கொரிய நிறுவனம் ஒன்றின் வசம் கொண்டு செல்ல இருக்கிறது.
தொழில்நுட்ப கொள்கை ஒப்பந்தத்தின் படி, தென் கொரிய செயலிகளுக்கு இந்தியாவில் தடைவிதிக்க வாய்ப்பில்லை என்பதால் இந்த முடிவுக்கு பப்ஜி கார்ப்ரேஷன் சென்றுள்ளது.
இதனால், இந்தியாவில் மீண்டும் பப்ஜி அதிராப்பூர்வமாக பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இந்த தடுப்பூசியால'... '90 சதவிகிதம் பேருக்கு ஆன்டிபாடிகள் அதிகரிச்சிருக்கு'... 'இது மட்டும் வெற்றியடைஞ்சா'... 'வெளியாகியுள்ள குட் நியூஸ்!'...
- "'டாக்டர்', வலி உசுரு போகுது"... 'ஆபரேஷன்' தியேட்டர் போய் பாத்ததுல... "இது எல்லாம் எப்படியா உள்ள போச்சு'ன்னு.." 'அரண்டு' போன 'மருத்துவர்'கள்!!!
- 'செம்ம அடி!.. சீனாவுக்கு தாய்லாந்து வைத்த செக்!.. கேஆர்ஏ கால்வாய் திட்டம் ரத்து!'.. அடுத்தது என்ன?
- 'வேடிக்கை பார்த்துட்டு இருப்போம்னு நெனைக்காதீங்க!.. என்ன நடந்தாலும்... நிச்சயமா திருப்பி அடிப்போம்!'.. இந்தியாவுக்கு சீனா கடும் எச்சரிக்கை!
- 'பஸ்ல ஒருத்தர் கிட்ட இருந்து'... '23 பேருக்கு பரவியிருக்கு'... 'முக்கிய தகவலுடன் எச்சரித்துள்ள ஆய்வாளர்கள்!'...
- PUBG உட்பட 118 சீன செயலிகளுக்கு தடை!!.. மத்திய அரசு அதிரடி!.. 'இது' தான் காரணம்!.. எந்தெந்த செயலிகள்?
- "இதுதான் உண்மையான 'medical miracle' போல",,.. பின்னாடி வழியா 'கம்பி' ஒண்ணு நுழைஞ்சு,,.. 'தோள்' வழியா வெளிய வந்துருக்கு, ஆனாலும்... வியந்து போன 'மருத்துவர்கள்'!!!
- இந்தியா-சீனா எல்லையில் மீண்டும் மோதல்... என்ன தான் நடக்குது?.. எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் 'இது' தான்!.. சீனா அடித்த பல்டி!
- '6 வயசுல இருந்தே தலைவலி...' 'கை கால் எல்லாம் மரத்து போயிருக்கு...' 'ஆனா பிரச்சனை தலைக்குள்ள உயிரோட இருந்த...' - விஷயம் தெரிஞ்சு மிரண்டு போன டாக்டர்ஸ்...!
- 'எல்லோருக்கும் ஃபிரீ டெஸ்ட்'... 'அதெல்லாம் இல்ல'... 'சீனாவோட பயங்கரமான பிளான் இதுதான்'... 'அச்சத்தில் சந்தேகத்தை கிளப்பியுள்ள மக்கள்!'...