ஏன் மனைவியை பகிர்ந்துக் கொள்கிறார்கள்..? கேரளாவை உலுக்கிய வழக்கு குறித்த உளவியல் பின்னணி

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கோட்டையம்: கேரளா மாநிலம் சங்கனாஞ்சேரியைச் சேர்ந்த பெண் ஒருவர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், தன்னை வேறொரு ஆணுடன் உடலுறவு கொள்ள வற்புறுத்துவதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

Advertising
>
Advertising

புகாரை விசாரித்த போலீசார் ஞாயிற்றுக்கிழமை அந்த பெண்ணிக் கணவரை உடனடியாக கைது செய்தனர். பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் தனது மனைவியை மாற்றிக் கொள்ளும் ஸ்வாப்பிங் குழுக்களில் பரிமாறிக் கொள்ள கட்டாயப்படுத்தியது வெளிச்சதிற்கு வந்தது. 

போலீசார் வழக்குப்பதிவு:

இந்த குழுவின் ஒரு பகுதியாக தான் இருப்பது ஒப்புக் கொண்ட அந்த நபர் மேலும் தன் மனைவியை வேறொரு ஆணுடன் உடலுறவு கொள்ள வற்புறுத்தி வந்ததையும் ஒப்புக் கொண்டுள்ளார். இந்த நிலையில், மனைவிகளை மாற்றி உல்லாசம் ஈடுபடும் கும்பலை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

ஏழு பேர் கைது:

அவர் அளித்த கொடுத்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் மனைவிகளை மாற்றி உல்லாசத்தில் ஈடுபடும் செயலில் பெருங்கும்பல் ஈடுபட்டு வருவதை தெரியவந்துள்ளது. அதில் இதுவரை 7 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 25க்கும் மேற்பட்டோர் கண்காணிப்பில் உள்ளதாகவும் மேலும் ஓரிரு நாட்களில் அவர்களும் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.

ஆயிரம் தம்பதிகள்:

இந்த குழுக்களின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தம்பதிகள் இருப்பதாகவும் அவர்கள் பெண்களை பரிமாறிக் கொள்வதாகவும், கேரள காவல்துறை தெரிவித்துள்ளது.  இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தியதில் இந்த சம்பவத்திற்குப் பின்னர் ஒரு பெரிய கும்பல் இருப்பதும் அதில் சில அரசியல் புள்ளிகளும் இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். 

இதுகுறித்து உளவியலாளர்கள் தெரிவிக்கும் போது, தற்போதைய சமூக கட்டமைப்பு, ஆன் பெண் உறவில் நடந்துள்ள சீர்திருத்தம் என கலாசார மாற்றங்களை மனித சமூகம் சந்தித்துள்ளது. ஆனால் மனித குல வரலாற்றில் ஒரு மனிதன் பல பேருடன் உறவு கொள்வது என்பது நம்முடைய சமூகத்தில் நடந்து வந்த ஒன்று தான். தற்போது அந்த வாழ்வியல் முறை மாறி பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளோம். ஆனால் மனிதனிடம் அந்த கிளர்ச்சி இருப்பதாக கூறப்படுகிறது.

பணம் தான் பிரதானம்:

ஆனால் இந்த கேரளா சம்பவத்தை பொறுத்த வரையில் பணம் தான் பிரதான விசயமாக கருதப்படுகிறது. ஏனெனில் இது எங்கோ ஒன்றிரண்டு என நடைபெறவில்லை. குழுவில் அதிகமானவர்களை இணைத்து நடைபெறுகிறது. எனவே இதற்கு பின்னால் பணம் தான் இருக்கிறது என பல தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் இது போன்ற பலவிதமான பாலியல் பிறழ்வுகள் உலக அளவில் இயங்கி வருகிறது. இயற்கையான பாலுறவின் மீதான சலிப்பு அதிகரித்து வருகிறது. மெய்நிகர் உலகில் மக்கள் தங்கள் உணர்வுகளை பரிமாறத் தொடங்கி விட்டனர். இதன் மூலம் வினோதமான முறையில் பல்வேறு கிளர்ச்சிகளை உருவாக்கி திருப்தி அடைகின்றனர்.

ஆனால், இதற்கு தர்க்க ரீதியாக என்ன காரணத்தை முன் வைத்தாலும் ஒருவரது விருப்பத்திற்கு மாறாக வற்புறுத்து, மனதளவில் துன்புறுத்தி இந்த மாதிரியான காரியங்களில் ஈடுபடுவது மனிதாபிமானமற்ற செயல் என்பதை உணர வேண்டும்.

தற்போது சைபர் கிரைம் மூலம் இந்த குழுவில் உள்ளவர்கள் யார் என்ற தேடுதல் வேட்டை தொடங்கியுள்ளது.

மனைவி, கேரளா, WIFES, SWAPPING, குழு, GROUP

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்