‘நோ எக்ஸாம்ஸ்!’.. ‘இந்த வகுப்பு வரைக்கும் ஆல் பாஸ்’.. சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு மத்திய அமைச்சகம் அதிரடி உத்தரவு!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சி.பி.எஸ்.இ பள்ளிகளில் பயிலும் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவார்கள் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. 

கொரோனாவால் உலக நாடுகள் முழுவதும் பல்வேறு இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பல நிறுவனங்களின் வணிகம், உலகச் சந்தை, பொருளாதார சூழல், கல்வி என பலதரப்பட்ட அம்சங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் இந்தியாவிலும் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இந்தியாவில் சி.பி.எஸ்.இ முறையில் கல்வி பயிலும் மாணவர்களுள் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவார்கள் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அதிரடியாக உத்தரவிட்டு அறிவித்துள்ளது. 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்