கல்லூரி வினாத்தாளில் மின்னல் முரளி: ஒரு பேராசிரியரின் ரசிக்க வைக்கும் ருசிகரமான கேள்விகள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரளா: எர்ணாகுளத்தில் உள்ள கொத்தமங்கலத்தில் உள்ள மார் அத்தனாசியஸ் பொறியியல் கல்லூரியில் உதவிப்பேராசிரியர் ஒருவர் மின்னல் முரளி படம் குறித்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

Advertising
>
Advertising

இயக்குநர் பாசில் ஜோசப் இயக்கத்தில் டோவினோ தோமஸ், குருசோமசுந்தரம், ஃபெமினா ஜார்ஜ், வசிஷ்ட், அஜு வர்கீஸ் உள்ளிட்டோர் நடிப்பில்  நடிப்பில் உருவாகி கடந்த டிசம்பர் வெளியான திரைப்படம் மின்னல் முரளி. நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி களத்தில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், மக்களுக்கு பிடிக்கும் வகையில் அமைந்திருந்தது.  மின்னல் தாக்கியதால் ஒரு கிராமத்தைச் சேர்ந்த இருவருக்கு புதிதாக சக்திகள் கிடைக்கின்றன. இவர்கள் இருவரால் அந்த கிராமம் என்ன ஆகிறது என்பதுதான் 'மின்னல் முரளி' திரைப்படத்தின் கதையாக இருந்தது.

லுங்கி கட்டிய சூப்பர் ஹீரோ என்ன செய்வார்கள் என்பதை நகைச்சுவை கலந்து அழுத்தமாக பதிவு செய்த படம். மார்வல் டிசி சூப்பர் ஹீரோ கதாப்பாத்திரங்களை மட்டுமே பார்த்து பிரமித்த நம்ம ஊர் மக்கள் மின்னல் முரளி மார்தட்டிக்கொள்ளும் அளவில் பெருமிதமாக அமைந்தது. இந்நிலையில், இந்தத் திரைப்படம் பற்றிய கேள்வி ஒரு கல்லூரியின் வினாத்தாளில் இடம்பெற்றிருப்பது மாணவர்களை ஆசுவாசப்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள கொத்தமங்கலத்தில் உள்ள மார் அத்தனாசியஸ் பொறியியல் கல்லூரி (MACE) உதவிப் பேராசிரியர் ஒருவர்தான் இப்படியான வினாத்தாள் ஒன்றை மாணவர்களுக்காக வடிவமைத்துள்ளார். 

டாக்டர் குரியன் ஜான் என்ற பேராசிரியர், மின்னல் முரளியின் கதையை ப்ளூயிட் மெக்கானிக்ஸ் பாடத்துடன் இணைத்து இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார். கேள்வியில், 'இந்த வினாத்தாளில் சித்தரிக்கப்பட்டுள்ள கதை, பெயர்கள், கதாபாத்திரங்கள் மற்றும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையானவை. உண்மையான எதனுடன் இதனைத் தொடர்புபடுத்தக்கூடாது. தேர்வை சிறப்பாக எழுதுங்கள், பிறகு என்னை விமர்சிக்கலாம்' என அந்தப் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

கேள்வி அனைத்தும் மின்னல் முரளியை அடிப்படையாகக் கொண்டது, 'மின்னல் முரளி இப்போது சர்வதேச சூப்பர் ஹீரோவாக இருப்பதால், அவர் அயர்ன்-மேனால் அமெரிக்காவுக்கு அழைக்கப்பட்டார். அவரது வருகையின் போது, ​​அயர்ன்-மேன் மின்னல் முரளிக்கு புதிய-நியூட்டோனிய திரவங்களை அறிமுகப்படுத்தினார். ஆனால், அவர் ப்ளுயிட் மெக்கானிக்ஸ் பாடத்தைப் படிக்காததால், அதனைப் புரிந்துகொள்ள, S3M-ன் சூப்பர் ஹீரோக்களைக் கலந்து ஆலோசித்தார். தயவுசெய்து அவருக்கு உதவுங்கள்' என்று கேள்வி கேட்டுள்ளார். பேராசிரியரின் இந்த வினாத்தாள் அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.

இந்நிலையில்,படத்தின் இயக்குநர் பாசில் ஜோசப் இதனைப் தனது சமூகவலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

MINNAL MURALI, KERALA, BASIL JOSEPH, VIRAL QUESTION, MACE ENGINEERING COLLEGE, TOVINO THOMAS, GURUSOMASUNDARAM, SUPER MAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்