'பயத்துலயே பாதி செத்துட்டாங்க!'... தூக்கிலிடுவதற்கு முன் 'நிர்பயா' குற்றவாளிகள் செய்தது என்ன?'... சிறை அதிகாரி பரபரப்பு கருத்து!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் கதறித் துடித்ததாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2012 ஆம் ஆண்டு, தலைநகர் டெல்லியில் ஓடும் பேருந்தில் 23 வயதான மருத்துவ மாணவி கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் குற்றவாளிகளான முகேஷ்குமார் சிங், பவன் குப்தா, வினய் சர்மா, அக்ஷய் குமார் ஆகிய நால்வரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை எதிர்த்து பல்வேறு சீராய்வு மனுக்களை தாக்கல் செய்தனர். அவர்களின் சீராய்வு மற்றும் கருணை மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று அதிகாலை 5.30 மணிக்கு அவர்கள் நால்வரையும் தூக்கிலிட உத்தரவிடப்பட்டு, தண்டனையும் நிறைவேற்றப்பட்டது.

இதற்கிடையில், நாம் நாளை தூக்கிலிடப்பட உள்ளோம் என்ற செய்தியை அறிந்த அவர்கள் நேற்று கவலையாலும், பயத்தாலும் துடித்துள்ளனர். மேலும், வழக்கமாக மாலை வேளைகளில் அவர்கள் அருந்தும் தேநீரையும் அருந்தவில்லை எனக் கூறப்படுகிறது.

இது பற்றி சிறைத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, "டெல்லி நீதிமன்றம் அவர்களது சீராய்வு மனுக்களை நிராகரித்த செய்தியை கேட்ட அவர்கள், பதட்டமடைந்து பயத்தால் கதறித் துடிக்க ஆரம்பித்தனர். இதையடுத்து, அவர்கள் தனி சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அப்போது அவர்கள் தாங்களே தங்களை காயப்படுத்திக் கொண்டனர். இதனைக் கண்ட சிறை அதிகாரிகள் அதைத் தடுத்தனர். பின், அவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டு அவர்களுடன் பேசுவதற்கு ஒரு ஆலோசகரும் நியமிக்கப்பட்டார். மேலும், அவர்களின் ஒட்டுமொத்த நடவடிக்கையும் கண்காணிக்க அதிகாரி ஒருவரும் நியமிக்கப்பட்டார்" என்று அவர் தெரிவித்தார்.

நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் இன்று தூக்கிலப்பட்டதை, பல்வேறு தரப்பினரும் கொண்டாடி வருகின்றனர். 

 

NIRBHAYA, TIHAR, CONVICTS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்