‘நடுங்குற குளிர்லயா வேலை செய்றீங்க?’ பார்த்ததும் பிரதமர் மோடி கொடுத்த சர்ப்ரைஸ் பரிசை பாருங்க..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவின் பிரதமரும் வாரணாசி தொகுதியின் அமைச்சருமான பிரதமர் நரேந்திர மோடி, காசியில் உள்ள புகழ்பெற்ற விஸ்வநாதர் கோவிலில் பணிபுரியும் குருக்கள், தூய்மைப்பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட 100 ஊழியர்களுக்கு சணலினாலான காலணியை அன்பளிப்பாக வழங்கியிருக்கிறார்.

‘நடுங்குற குளிர்லயா வேலை செய்றீங்க?’ பார்த்ததும் பிரதமர் மோடி கொடுத்த சர்ப்ரைஸ் பரிசை பாருங்க..!
Advertising
>
Advertising

'இனி நடுங்கும் குளிரில் வெறுங்காலோடு அவர்கள் கஷ்டப்பட வேண்டியதில்லை' என மோடி தெரிவித்துள்ளார்.

கடுங்குளிர்

'காசியில் நிலவும் கடுங்குளிரிலும் அங்குள்ள குருக்கள், பாதுகாப்பு ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள் வெறுங்காலோடு பணியாற்றிவருவதை பிரதமர் மோடி அறிந்திருக்கிறார். உடனடியாக 100 சணலினாலான காலணிகளை அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார்', என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Prime Minister's Gift For Kashi Temple Corridor Workers

 

"மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு தான்‌ தெரியும்" மொமண்ட்!.. IPS அதிகாரியின் நெகழ்ச்சி செயல்! வீடியோ..

விரிவாக்கப்பணிகள்

கடந்த மாதம் காசி விஸ்வநாதர் கோவில் முதற்கட்ட விரிவாக்கப் பணிகளை பிரதமர் மோடி துவங்கி வைத்தார். கங்கை ஆற்றங்கரை வரையில் மொத்தம் 5 லட்சம் சதுர அடிகளுக்கு இந்த விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. இதன்மூலம் ஏராளமான பக்தர்கள் பயனடைவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொகுதி மேம்பாடு

வாரணாசி மக்களின் துயர்களைக் கேட்டறிந்து அவற்றை சரிசெய்யும் நோக்கில் பல ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை பிரதமர் மோடி எடுத்துவருவதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பானி வாங்கிய புது ஹோட்டல் - விலையை கேட்டா ஆடிப்போய்டுவீங்க..!

NARENDRAMODI, PM, FOOTWEAR, KASHI VISHWANATH DHAM, 100 PAIRS OF JUTE FOOTWEAR, NARENDRAMODI, ஊழியர்கள், பிரதமர் மோடி, நரேந்திர மோடி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்