'அதிகரித்து வரும் கொரோனா அச்சுறுத்தல்' ... நாட்டு மக்களிடம் உரையாற்றவுள்ள பிரதமர் ... மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வாய்ப்பு?
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா அச்சறுத்தல் தொடர்பாக இன்று இரவு 8 மணிக்கு நரேந்திர மோடி அவர்கள் நாட்டு மக்களிடம் உரையாற்றவுள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் சுமார் நானூறுக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்று மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். பஞ்சாப், டெல்லி, கேரளா, ராஜஸ்தான் உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்கள் 144 தடை உத்தரவை அமல்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் வரும் 31 ஆம் தேதி வரை 144 தடை அமல்படுத்தப்படவுள்ளது.
கடந்த 19 ஆம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி இந்திய மக்களிடம் உரையாற்றிருந்தார். அப்போது பேசிய அவர், 22 ஆம் தேதி அன்று இந்திய மக்கள் சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார். அதே போல் இந்திய மக்கள் அனைவரும் வீட்டிலே தங்கியிருந்து சுய ஊரடங்கிற்கு சிறந்த ஒத்துழைப்பை அளித்தனர்.
இந்நிலையில் இன்று இரவு எட்டு மணிக்கு நாட்டு மக்களை சந்தித்து பேசவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் அச்சுறுத்துதல் அதிகரித்து வருவதால் மக்கள் விழிப்புணர்வுடன் இருப்பது குறித்து பேசுவார் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- வரியா, 'சோப் போட்டு கை கழுவ ரெடியா' ... ஆடல் பாடலுடன் கொரோனா விழிப்புணர்வு ... அசத்திய தீயணைப்பு படையினர்!
- 'வீட்டுக்குள்ளயே இருங்க, வெளிய வர வேணாம்' ... மதுக்கடைகளுக்கு க்ளோஸ் ... புதுச்சேரிக்கு 144!
- 'புதுக்கோட்டை' மாணவ மணிகளே ... வீட்ல போர் அடிக்குதா, இந்த சான்ஸ் உங்களுக்கு தான் ... புதுகோட்டை கலெக்டரின் சூப்பர் முயற்சி!
- அடுத்த 'பத்து நாட்கள்' தமிழக எல்லைகளுக்கு சீல் ... அத்தியாவசிய வாகனங்களுக்கு மட்டும் அனுமதி ... கொரோனா தொற்றைத் தடுக்க தமிழக அரசின் லேட்டஸ்ட் அறிக்கை
- 'கொரோனா' பரவாமல் தடுக்க 'ப்ரோமோஷன்' ... பேசு பொருளான கொல்கத்தா 'மாஸ்க்குகள்' ... 'உண்மை' நிலவரம் என்ன ?
- "எது சூச்சின் டெண்டுல்கரா?..." "யாருப்பா அது... யாருக்காவது தெரியுமா?..." 'ஐ.சி.சி'. கிண்டல் செய்து 'வீடியோ' வெளியீடு...
- திருவள்ளுவர் திருநாளில் அந்த மகானை வணங்குகிறேன்...! பிரதமர் மோடி தமிழில் டுவிட்...!