'அவசர' நிலைக்கு தயாராக இருக்க வேண்டும்... மத்திய சுகாதாரத்துறைக்கு 'பிரதமர்' அறிவுரை!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

அவசர நிலைக்கு தயாராக இருக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறைக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கி இருக்கிறார்.

இந்தியா முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனாவை கட்டுக்குள் வைக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மூத்த அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பிரதமர் மோடி நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பில் மூன்றில் இரண்டு பங்கு 5 மாநிலங்களிலேயே உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தின் முடிவில் அவசர காலத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு மத்திய சுகாதாரத்துறைக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தினார். மேலும் மத்திய சுகாதாரத்துறை மற்றும் மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து மாவட்ட மற்றும் நகர அளவில் படுக்கைகள், மருத்துவ வசதிகள் உள்ளிட்டவை தேவையான அளவு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்