“பிரதமர் மோடியின் பாதுகாப்புக்கு இவ்ளோ கோடியா?”.. “எவ்ளோனு தெரிஞ்சா ஆடிப்போவீங்க ஆடி!”

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஒவ்வொரு வருடமும் மோடியின் சொந்த பாதுகாப்பிற்காக ஒதுக்கப்படும் தொகை அதிகரிக்கப் பட்டுக்கொண்டே வரும் நிலையில், இந்த ஆண்டு மோடிக்கான பாதுகாப்பிற்கு மட்டும் ரூ.600 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, அவரின் சொந்த பாதுகாப்பு படையினால் கொல்லப்பட்ட பிறகு, சிறப்பு பாதுகாப்பு குழு என அழைக்கப்படும் எஸ்.பி.ஜி-யில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன்பிறகு இந்த சிறப்பு பாதுகாப்பு குழு இந்திரா காந்தியின் குடும்ப வாரிசுகளை பாதுகாத்த நிலையில், சென்ற வருடம் அந்த பாதுகாப்பு சேவை திரும்ப பெறப்பட்டது. தற்போது, எஸ்.பி.ஜியின் பாதுகாப்பு சேவை அளிக்கப்பட்டுவருவது பிரதமர் மோடிக்குதான்.

இந்த நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று நாடாளுமன்றத்தில் நெடும் உரை ஆற்றிய பிறகு, இந்த ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலை வெளியிட்டார். இந்த பட்ஜெட்டில் இந்திய பிரதமர் மோடியின் பாதுகாப்பிற்காக மட்டும் ரூபாய் ரூ.600 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. மோடியின் பதவிக்காலத்தில்,  2008-ம் ஆண்டு ரூ.420 கோடியாக இருந்த பாதுகாப்பு செலவு, 2019 ஆண்டு ரூ.540 கோடியாக அதிகரித்தது. இந்த நிலையில் மேலும் ரூ.60 கோடியை அதிகரித்து ரூ.600 கோடி ரூபாய் மதிப்பில் மோடியின் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது மத்திய அரசு.

NARENDRAMODI, PRIMEMINISTER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்