'மதுரை சலூன் கடைக்காரரை பாராட்டிய பிரதமர்...' 'என்கிட்ட உதவி கேட்டு வரவங்களுக்கு...' என் மனைவி நகையை வித்தாவது உதவுவேன்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மகளின் மேற்படிப்புக்காக சேமித்து வைத்திருந்த பணத்தை ஏழை மக்களுக்கு உதவிய சலூன் கடைக்காரருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்

Advertising
Advertising

மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஊரடங்கு தொடங்கிய நாளில் இருந்து பலர் உதவி செய்து வருகின்றனர்.

மதுரை மாவட்டம் மேலமடையில் வசித்து வருபவர் மோகன்(47). சலூன் நடத்தி வருகிறார். ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஐந்து கிலோ அரிசி, காய்கறிகள், பலசரக்கு சாமான்கள் மற்றும் சமையல் எண்ணெய் போன்றவற்றை வழங்கி உதவி செய்கிறார். இதற்காக தனது மகள் நேத்ராவின் படிப்புக்காக சேமித்து வைத்திருந்த ஐந்து லட்சம் ரூபாயை செலவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘நான் உதவி வழங்குவதை கேள்வி பட்டு ஏராளமான மக்கள் என் வீட்டு கதவை தட்ட தொடங்கியுள்ளனர். என்னிடம் இருக்கும் பணத்தை வைத்து உதவிகளை வழங்கி வந்தேன். மேலும் பணம் தேவைபட்டால் எனது மனைவியின் நகைகளை வைத்து, எனது இடத்தை விற்றும் உதவிகள் செய்வேன். உதவி செய்வதால் இழந்த பணத்தை என் வாடிக்கையாளர்களிடம் இருந்து மீண்டும் சம்பாதித்து விடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது’’ என்று கூறியுள்ளார். மோகனின் மகள் நேத்ரா, தற்போது ஒன்பதாவது வகுப்பு படித்து வருகிறார். ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் படித்து வருவதாக அவர் தெரிவித்துளார்.

இந்த நெருக்கடியான சூழ்நிலையில் மக்களுக்கு மோகன் உதவிய சம்பவம் பிரதமர் மோடிக்கு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மன் கீ பாத் நிகழ்ச்சியின்போது மகள் மேற்படிப்புக்காக வைத்திருந்த ஐந்து லட்சம் ரூபாய் பணத்தில் மக்களுக்கு உதவிய மோகனுக்கு பிரதமர் மோடிபாராட்டு தெரிவித்தார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்