"நான் யாரு தெரியுமா?.." 5 வயது சிறுமியிடம் பிரதமர் கேள்வி.. பதில் கேட்டு அவரே சிரிக்க ஆரம்பிச்சுட்டாரு
முகப்பு > செய்திகள் > இந்தியா44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி, சென்னையின் மகாபலிபுரத்தில் வைத்து நடைபெறவுள்ளது. இதற்காக, உலக அளவில் சுமார் 2000 க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ளவும் உள்ளனர்.
இதன் தொடக்க விழா, இன்று (28.07.2022) சென்னை நேரு ஸ்டேடியத்தில் வைத்து நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இதனை தொடங்கி வைக்க இன்று சென்னை வருகிறார்.
இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், மாலை 6 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு பிரதமர் வருவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, 5 வயது சிறுமியிடம் மோடி கேட்ட கேள்வியும், அதற்கு அந்த குழந்தை தெரிவித்த பதிலும் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. மத்திய பிரதேச மாநிலம், உஜ்ஜைன் தொகுதியின் பாஜக எம்பி அனில் ஃபிரோஜியா, தனது குடும்பத்தினருடன் பிரதமர் மோடியை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார்.
அப்போது, அனில் ஃபிரோஜியாவின் ஐந்து வயது மகளான அஹானாவுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையே நடந்த வேடிக்கையான உரையாடல் தொடர்பான செய்தி தான் தற்போது பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. அப்போது அஹானாவிடம், "நான் யார் தெரியுமா?" என மோடி கேட்கிறார். இதற்கு பதிலளித்த அஹானா, "தெரியும். நீங்கள் தான் மோடி ஜி. நீங்கள் தான் தினந்தோறும் டிவியில் வருவீர்கள்" என பதிலளித்துள்ளார்.
தொடர்ந்து, மீண்டும் அந்த சிறுமியிடம், "நான் என்ன செய்கிறேன் என உனக்கு தெரியுமா?" என்றும் சிறுமி அஹானாவிடம் கேட்கிறார். அதற்கு சிறுமி சொன்ன பதிலைக் கேட்டு அங்கிருந்த அனைவரும் சிரிக்கத் தொடங்கினர். இதற்கு காரணம், "நீங்கள் மக்களவையில் வேலை செய்கிறீர்கள்" என அந்த சிறுமி அளித்த பதில் தான். இதனைக் கேட்டு பிரதமர் மோடி உள்ளிட்ட அனைவரும் சிரிக்க ஆரம்பித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
தொடர்ந்து, கடைசியில் சிறுமி அஹானாவுக்கு சாக்லேட்டுகளையும் பிரதமர் மோடி வழங்கி உள்ளார். தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் பிரதமர் மோடியை சந்தித்தது தொடர்பான புகைப்படங்களை மிகவும் நெகிழ்ந்து போய் எம்பி அனில் ஃபிரோஜியா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 1 ரூபாய்க்கு வைத்தியம் பார்த்த மருத்துவர் சுஷோவன் மறைவு.. பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அஞ்சலி..கலங்கிப்போன பொதுமக்கள்..!
- 9.5 டன் எடையில் உருவாக்கப்பட்ட அசோக சின்னம்.. நெகிழ்ச்சியுடன் திறந்து வைத்த பிரதமர் மோடி.. முழு விபரம்..!
- கவுன்சிலர் டூ ஜனாதிபதி வேட்பாளர்..பழங்குடி பெண்ணை குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவித்த பாஜக.. யார் இந்த திரௌபதி முர்மு?
- 'English-ல் சரளமாக பேசிய முதல்வர் ஸ்டாலின்'.. அடுத்தடுத்து வச்ச கோரிக்கைகள்.. வியந்த பிரதமர்..!
- Rahul Gandhi: "வாழ்நாள் முழுசும் தமிழ்நாட்ட உங்களால ஆள முடியாது!".. பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி உரை வீச்சு!
- 'தப்பு தான்.. என்ன மன்னிச்சிடுங்க..' நாடாளுமன்றத்திலேயே மன்னிப்பு கேட்ட இங்கிலாந்து பிரதமர்.. ஏன் தெரியுமா?
- "தமிழ் டிவி நிகழ்ச்சியில பிரதமரை கேலி செஞ்சுட்டாங்க!".. அடுத்து செய்யப்போவது என்ன? அண்ணாமலை பரபரப்பு ட்வீட்!!
- ‘நடுங்குற குளிர்லயா வேலை செய்றீங்க?’ பார்த்ததும் பிரதமர் மோடி கொடுத்த சர்ப்ரைஸ் பரிசை பாருங்க..!
- 'பிரதமர் மோடியின் பாதுகாப்புக்கு குளறுபடிக்கு நாங்கள் காரணமே இல்லை'- பஞ்சாப் முதல்வர் விளக்கம்
- உயிருடன் விமான நிலையம் திரும்பியதற்கு உங்களுடைய முதலமைச்சருக்கு நன்றி : பிரதமர் மோடி