'மூக்கு வழியா குழாயை விட்டு...' 'சூடா காற்றை செலுத்தி...' 'எப்பா சாமி...'கொரோனா சிகிச்சையை விட...' 'இது எவ்வளவோ பெட்டர்...'
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனாவால் பாதிக்கப்பட்டு உடலுறுப்புகள் செயலிழந்து கடினமான சிகிச்சைகளை மேற்கொள்வதைவிட தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து நோய்த் தொற்றிலிருந்து விலகியிருப்பதே சாலச்சிறந்தது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று நோயை குணப்படுத்துவதற்கு என்று சிகிச்சை இல்லாத நிலையில் செயல் இழக்கும் உள்ளுறுப்புகளை பாதுகாக்க மருத்துவர்கள் சில தீவிரமான சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றனர். பெரும்பாலும் இந்த சிகிச்சைமுறைகள் கைகொடுக்காமல் உயிரிழப்பில் சென்று முடிந்துவிடுகிறது.
தற்போதை நிலையில், நோய் அறிகுறிகளை எதிர்த்து போராடுவதும், உறுப்புகளின் செயல்பட்டை தீவிரமாக பராமரிப்பதும்தான் ஒரே வழியாக இருக்கிறது. இதன்மூலம் மட்டுமே இறப்பு வீதத்தை குறைக்க வேண்டிய சூழலில் நாம் இருக்கிறோம்.
உதாரணமாக கொரோனா பாதிப்பு முற்றிய நிலையில் ரத்தத்தில் அமிலத்தன்மை அதிகரித்து விடுகிறது. இதனால் ரத்தத்தை வடிகட்டுவதற்கு ஒரு செயற்கை கல்லீரல் சுத்திகரிப்பு அமைப்பு தேவைப்படுகிறது. சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த நிலை மேலும் மோசமாக்கி விடும். அவர்களுக்கு சிறுநீரக மாற்று சிகிச்சையே வழியாக உள்ளது.
கடுமையாக பாதிக்கப்பம் நுரையீரல் செயல்பாட்டை நீட்டிப்பதற்கு, சுவாச குழாயில் ஒரு குழாயை செருகி காற்று செல்வதற்கு வழி ஏற்படுத்தப்படும். மேலும், மூக்கில் ஒரு குழாய் வழியாக சூடான மற்றும் ஈரப்பதமான ஆக்சிஜனை செலுத்தப்படும். இவை போன்ற நிலைகள் பாதிக்கப்பட்டு 10 நாட்களுக்குள் நேர்ந்து விடலாம். இப்படி கடினமான, சவாலான பாதைகளை கடந்து செல்வதை விட, நோய்த் தொற்றிலிருந்து விலகியிருப்பதே தற்போதைய சூழலில் மிக எளிதான வழியாக உள்ளது.
தற்காப்பு கவசங்கள், முக கவசம், தனிமனித இடைவெளிகளை தவறாமல் பின்பற்றுதல், அடிக்கடி கைகளை சுத்தமாக கழுவுதல் போன்ற எளிமையான வழிகளின் மூலமாக கொரோனா என்ற எதிரி நம்மை அண்ட விடாமல் தடுக்கலாம். இதைத் தவிர வேறு நிவாரணம் இல்லை!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இனி' அவ்வளவுதான் 'வாழ்க்கை' முடிந்தது என... நினைத்த 'புற்று நோயாளிகளைக்' கூட.... 'கொரோனாவிலிருந்து' மீட்ட 'சென்னை மருத்துவர்கள்...'
- 'அப்பா...! நம்ம ஊர்லயும் கொரோனா வந்துச்சுப்பா...' 'அழாத ரோஜா, நான் வெளிய போகமாட்டேன்...' கண்ணீர் வரவழைக்கும் அப்பா, மகள் கான்வர்சேஷன்...!
- தினமும் வரும் குட் நியூஸ்... கொரோனா இல்லாத மாநகராட்சி... சாதிக்கும் மாவட்டங்கள்!
- 'வக்கீல்களின் கருப்பு கோட்டிற்கு கொரோனாவால் வந்த ஆபத்து'... சுப்ரீம் கோர்ட் முக்கிய அறிவிப்பு!
- "நாடு முழுவதும் ஜூன் 30 வரை பயணிகள் ரயில் சேவை ரத்து!".. ''ஏற்கனவே முன்பதிவு செய்தோருக்கு.." - ரயில்வே அமைச்சகம் புதிய அறிவிப்பு!
- 'நாங்க எவ்வளவோ சொன்னோம்'... 'சென்னையில கொரோனா எகிற இவங்க தான் முக்கிய காரணம்'... முதல்வர் அதிரடி!
- "ஆசிரியருக்கு நிகர் ஆசிரியர்தான்!".. 'கொரோனா வார்டில்' சிகிச்சை பெறும் நிலையிலும் சோர்வடையாத 'அறப்பணி!'.. கண்கலங்க வைக்கும் நிகழ்வு!
- '127 நாடுகளுக்கு' மருந்து வழங்கப் போகும் 'இந்தியா'!.. 'கொரோனா' பலி 3 லட்சத்தை நெருங்கிய நிலையில் அமெரிக்க நிறுவனத்தின் 'அதிரடி முடிவு'!
- அப்டிலாம் 'ஈஸியா' நெனைச்சுராதீங்க... 'அதிர்ச்சி' தகவலை பகிர்ந்த 'வைரஸ்' வேட்டைக்காரர்!
- 'சிறு' வியாபாரிகளின் 'பழவண்டியை' குப்புறக் 'கவிழ்த்த' நகராட்சி 'அதிகாரி' மீது எடுக்கப்பட்ட 'அதிரடி' ஆக்ஷன்!