"இறந்து போனவங்களுக்கு.." 30 வருஷம் கழிச்சு நடக்கும் கல்யாணம்.." வியந்து பார்க்க வைக்கும் வினோத சடங்கு!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பொதுவாக, நம் இந்திய நாட்டில் பல இடங்களில் சமுதாயத்திற்கும், இடத்திற்கும் ஏற்ப ஏராளமான பழக்க வழக்கங்கள் மற்றும் சடங்கு முறைகள் பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

Advertising
>
Advertising

இதில் நாம் புதிதாக தெரிந்து கொள்ளும் பல நடைமுறைகள், நிச்சயம் நம்மை வினோதத்தில் ஆழ்த்தும்.

அந்த வகையில், கர்நாடகா பகுதியில் தற்போது நடந்துள்ள சடங்கு தொடர்பாக ட்விட்டரில் ஒருவர் பதவிட்டது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலம், தக்ஷினா கன்னடா என்ற மாவட்டத்தில், "பிரேத கல்யாணம்" என்ற பெயரில் இறந்தவர்களுக்கு திருமணம் செய்யும் நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றுள்ளது. கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில், சில சமுதாயத்தை சேர்ந்த மக்கள், இப்போதும் பிரேத கல்யாணம் என்ற ஒரு சடங்கினை பின்பற்றி வருகின்றனர்.

இது தொடர்பாக தற்போது நடந்த சடங்கு ஒன்றின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ட்விட்டர்வாசி ஒருவர், பிரேத கல்யாணம் என்றால் என்ன என்பதை விளக்கி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த குழந்தைகள் இரண்டு பேருக்கு தான் இந்த பிரேத கல்யாணம் என்ற பெயரில் திருமணம் நிகழ்ந்துள்ளது. இது மிகவும் சீரியசான ஒரு நடைமுறையாகவும் பின்பற்றப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த பிரேத கல்யாணம் நடைபெறுவதற்கு காரணம், சிறுவயதிலோ அல்லது இளமைப் பருவத்திலோ அல்லது திருமணம் செய்யாமலோ இறப்பவர்களுக்காக தான்.

திருமணம் இல்லாமல் ஒருவரின் வாழ்க்கை முழுமை அடையாது என்றும், அதற்கு முன்பாக இறந்தவர்கள் ஆன்மாவாகவே அலைந்து திரிந்து கொண்டிருப்பதால் அவர்களின் குடும்ப சந்ததி பிரச்சனைகள் எதிர்கொண்ட படியே இருக்கும் என்பதற்காக, அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து மோட்சம் அடைய இந்தச் சடங்கினை அவர்கள் பின்பற்றி வருகின்றனர்.

ஒரு திருமணம், இப்போது எப்படி நடக்கிறதோ, அதே சடங்கு முறைகளை பின்பற்றி இரண்டு இருக்கைகளில் துணியை விரித்து, மணமகன் மணமகள் இருப்பதாக பாவித்து திருமண சடங்குகளை இவர்கள் மேற்கொண்டுள்ளனர்.

கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளில், பல சமுதாய மக்கள் இதனை பின்பற்றும் நிலையில், இது பற்றி தற்போது தெரிந்துள்ள பலரும் இதை படித்து வியந்தும் மிரண்டும் போயுள்ளது குறிப்பிடத்தக்கது.

PRETHA KALYANAM, KARNATAKA, KERALA, TRADITION

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்