இனிமேல் இந்த ‘தப்பை’ யாரும் பண்ணாதீங்க.. ‘1 மணி நேரம் ஆம்புலன்ஸில் துடித்த கர்ப்பிணி’.. நெஞ்சை பதற வைத்த சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கர்ப்பிணியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது சாலையில் போடப்பட்டிருந்த செடிகள் ஆம்புலன்ஸின் சக்கரத்தில் சிக்கி ஒரு மணிநேரமாக நின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் நஞ்சன்கூடு அடுத்த கூட்லாபூர் கிராமத்தில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு திடீரென பிரசவலி ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஆம்புலன்ஸ் வேகமாக மருத்துவமனையை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது விவசாயி ஒருவர், கொள்ளு செடிகளை சில கிலோமீட்டர் தூரம் சாலையில் கிடத்தி போட்டுள்ளார். இதன் மீது சென்ற ஆம்புலன்ஸின் சக்கரத்தில் கொள்ளு செடி அதிகமாக சிக்கிக்கொண்டது. இதனால் ஆம்புலன்ஸ் நகர முடியாமல் சாலையிலேயே நின்றுவிட்டது.

என்னது இந்தியா டீமுக்குள்ள ‘ரெண்டு’ கேங்கா பிரிஞ்சு இருக்காங்களா..? கொழுத்திப் போட்ட பாகிஸ்தான் வீரர்..!

இதனை அடுத்து நீண்ட நேரமாக முயன்றும் சக்கரத்தில் இருந்த கொள்ளுச் செடிகளை அகற்ற முடியவில்லை. அப்போது கர்ப்பிணி பெண் வலியால் துடிதுடித்துள்ளார். இந்த சத்தத்தை கேட்ட அருகிலிருந்த விவசாயிகள் வேகமாக ஓடி வந்து சாலையில் கிடந்த கொள்ளு செடிகளை வேகமாக அகற்றியுள்ளனர். சுமார் 1 மணிநேர போராட்டத்துக்கு பின் ஆம்புலன்ஸ் அங்கிருந்து சென்றது.

கர்நாடக மாநிலத்தில் சாலைகளில் பயிர் செடிகளை கிடத்தக்கூடாது என அம்மாநில அரசு விவசாயிகளுக்கு வலியுறுத்தியுள்ளது. இதனை மீறி சில பகுதிகளில் விவசாயிகள் சிலர் சாலைகளில் செடிகளை கிடத்தி வருவதாக கூறப்படுகிறது. கர்ப்பிணியை ஏற்றி சென்ற ஆம்புலன்ஸ் சாலையில் கிடத்திய செடியில் ஒரு மணி நேரமாக நின்ற சம்பவத்துக்கு சமூக ஆர்வலர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இனிமேல் இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது என வலியுறுத்தியுள்ளனர்.

நைட்டி அணிந்து வீட்டுக்குள் நுழைந்த நபர்.. உடனே பக்கத்துவீட்டுக்காரரை ‘அலெர்ட்’ பண்ணிய பெண்.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!

PREGNENT CARRING AMBULANCE STUCK, PREGNANT WOMAN, HOSPITAL, கர்ப்பிணி, ஆம்புலன்ஸ், கர்நாடக மாநிலம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்