'7மாச கர்ப்பிணி, அப்போ ஏன் டூட்டி பாக்குறீங்க'... 'போலீஸ் அதிகாரி அம்ரிதா சொன்ன பதில்'... நெகிழ்ந்து போன மக்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தான் கர்ப்பிணியாக இருந்தபோதும், விடுமுறை எடுத்துக்கொண்டு ஓய்வு எடுக்காமல் களத்தில் நின்று பணியாற்றி வரும் பெண் காவல்துறை அதிகாரியை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக பல அரசு துறையை சேர்ந்த அதிகாரிகள் இரவு பகல் பாராது பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில் சத்தீஸ்கரின் ராய்பூரில் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர், அம்ரிதா சோரி. 7 மாத கர்ப்பிணியான இவர், சாலையில் நின்று பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிகழ்வு பலருக்கு ஊக்கமாக அமைந்துள்ளது. இதுகுறித்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் பேசியபோது, '' காவல்துறை பணி என்பது மிகவும் முக்கியமானது. நான் சாலையில் நிற்கும்போது என்னுடன் இருக்கும் காவல்துறை பணியாளர்களுக்கு அது மேலும் ஊக்கம் தருவதாக இருக்கிறது. உடன்பணியாற்றும் மூத்த, இளைய காவல்துறை பணியாளர்கள் மிகுந்த ஆதரவாக இருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

மக்களுக்காக பணியாற்றும் இதுபோன்ற அதிகாரிகளை பார்த்தாவது மக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்க வேண்டும் என, நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதே நேரத்தில் உங்களது உடல்நிலையையும் பார்த்து கொள்ளுங்கள் மேடம் என பலரும் பாசமாக தங்களின் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்