“அப்பா சிக்கிரம் வாப்பானு சொல்லிட்டே இருக்கா”.. ஹோலிப்பண்டிகையில் கலங்க வைத்த கர்ப்பிணியின் பதிவு!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

வட இந்தியாவைப் பொருத்தவரை சகோதரத்துவத்தை போற்றும் விதமாக கொண்டாடப்படும் ஹோலிப் பண்டிகை மிகவும் வண்ணமயமான திருவிழாவாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் டெல்லியைச் சேர்ந்த 7 மாத கர்ப்பிணியான சுனிதா ஹோலிப் பண்டிகை கொண்டாடுவது பற்றி பகிர்ந்துள்ள தகவல்கள் நாட்டையே கவனிக்க வைத்துள்ளது. தற்போது 25 வயதே ஆன சுனிதா 3 குழந்தைகளுக்கு தாய், 7 மாதக் கருவை வயிற்றில் சுமந்து கொண்டு இருக்கிறார். டெல்லி வடகிழக்கு பகுதியில் வசித்து வரும் சுனிதா தன் கணவரை டெல்லி கலவரத்தில் பரிதாபமாக இழந்துள்ளார்.

இதுபற்றி பேசிய சுனிதா, “ஹோலி பண்டிகையின் போது ஒவ்வொரு வருடமும் நாங்கள் சொந்த ஊருக்கு சென்று விடுவோம். ஆனால் இந்த முறை எனக்கு அவரின்றி தனியாக செல்ல மனமில்லை. ஹோலிப் பண்டிகையை தனிமையில் கொண்டாட முடிவு செய்தேன். என் குழந்தைகளோ தங்களது தந்தைக்கு என்ன நடந்தது என்று கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு பதிலும் கூற என்னால் முடியவில்லை என் பெரிய மகள், தன் தந்தை காணாமல் போய்விட்டார் என்று சமாதானம் கூறுகிறாள். ஆனால் சிறியவளோ போனை கையில் எடுத்துக்கொண்டு அப்பாவிடம் பேசுவதாக நினைத்துக் கொண்டு, ‘அப்பா சீக்கிரம் வாப்பா’ என்று கூறுகையில் கண்ணீர் நெஞ்சை அடைக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

டெல்லி கலவரத்தின்போது சுனிதா வாழும் பகுதியில் இருபதுக்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வீடுகள் கொளுத்தப்பட்டதாகவும் அப்பகுதியில் ஹோலிப் பண்டிகைக்கு யாரும் தயாராக இல்லை என்றும் எப்போதும் பரபரப்பாக இருக்கும் இந்த இடம் இந்த ஹோலி பண்டிகையில் கூட, அச்சத்துடன் காணப்படுவதாகவும், இப்படி ஒரு மோசமான ஹோலியை இதுவரை தாங்கள் உணர்ந்தது இல்லை என்றும் குழந்தைகள் வெளியில் செல்லவே பயப்படுகிறார்கள் என்றும் அங்கிருக்கும் சிலர் குறிப்பிடுகின்றனர்.

DELHIPROTEST, LADY, WOMAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்