'மண்டையை பிளக்கும் உச்சி வெயில்'... '5 மாத கர்ப்பம்'... 'டிஸ்பி ஷில்பா'வை யாருன்னு தெரியுதா'?... 'அவரா இவர், அசந்து போன மக்கள்'... வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாகாவல் பணி என்பது மக்களுக்கானது என்பதைத் தனது கர்ப்ப காலத்திலும் நிரூபித்து உள்ளார் டிஎஸ்பி ஒருவர்.
கடந்த ஆண்டு ஆரம்பித்த கொரோனாவின் ஆட்டம் இன்னும் முடியவில்லை. அதற்குள் கொரோனாவின் இரண்டாவது அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பேரிடர் பெரிய சோகங்களையும், பல நம்பிக்கைகளையும், உண்மைகளையும், கடமையாளர்களையும் நமக்கு நிறையவே காட்டி வருகிறது. அந்த வகையில் தனது தனிப்பட்ட விருப்பங்களை விடக் கடமையே முக்கியம் என நிரூபித்து உள்ளார் டிஎஸ்பி ஒருவர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதன் காரணமாக லாக்டவுன் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பஸ்தார் பகுதியில் விதிகளை மீறி பொதுமக்கள் வெளியே வரும் நிலையில், அவர்களைப் பெண் டிஎஸ்பி ஷில்பா சாஹு அறிவுரை சொல்லி அனுப்பி வைத்து வருகிறார். அவர் ஐந்து மாத கர்ப்பிணியும் கூட.
அவர் நினைத்திருந்தால் விடுமுறை எடுத்துக்கொண்டு வீட்டில் ஓய்வெடுத்து இருக்கலாம். ஆனால் கடமையே முக்கியம் என்று கடுமையான வெயிலில் நின்றுகொண்டு பணிகளை கவனித்து வருகிறார் டிஸ்பி ஷில்பா சாஹு. கடுமையான கொரோனா சூழலிலும் வீட்டில் இருக்காமல் கடமையைச் செய்துவரும் ஷில்பா சாஹுவின் வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இதையடுத்து அவருக்குப் பாராட்டுக்குள் குவிந்து வருகிறது.
ஷில்பா சாஹு பல அதிரடிகளுக்குப் பெயர் பெற்றவர். அவர் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் அதிரடி காட்டியவர். சத்தீஸ்கர் மாநிலம் நக்சல்கள் அதிகமாக நடமாடும் பகுதியாகும். இதனால் எப்போதும் காவல்துறை விழிப்புடனே செயல்பட வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்த சூழ்நிலையில் எல்லாம் பல நக்சல் நடவடிக்கைகளுக்காகக் காட்டிற்குள் சென்று பல அதிரடிகளைச் செய்தவர் தான் ஷில்பா சாஹு.
இதற்கிடையே சத்தீஸ்கர் டிஜிபி டி.எம்.அவஸ்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "ஷில்பா இந்த நிலையில்கூட பணிபுரிகிறார்… அவர் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகளிலும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார்… அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டு. ஷில்பா சத்தீஸ்கர் போலீசாரின் சொத்து" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே நெட்டிசன்கள் சிலர், ஷில்பாவுக்கு பாராட்டுகளைத் தெரிவித்தாலும், இதுபோன்ற சூழ்நிலையில் அரசு அவருக்கு விடுமுறை கொடுத்திருக்க வேண்டும் அல்லவா, அதை விடுத்து, அவரை பணி செய்ய வைப்பது என்ன வகையான நியாயம் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- உயர்ந்தது கொரோனா தடுப்பூசியின் விலை...! ஒரு தடுப்பூசியோட விலை எவ்வளவு தெரியுமா...? சீரம் நிறுவனம் அதிரடி அறிவிப்பு! - அதிர்ச்சியில் பொதுமக்கள்...!
- 'லாபம்' அப்படிங்குறது 'கெட்ட வார்த்தை' இல்ல...! மத்திய அரசின் 'அந்த' அறிவிப்பை பாராட்டி தள்ளிய ஆனந்த் மஹிந்திரா...!
- 'எதிரே வந்தவர் மீது எச்சிலை துப்பிய இளைஞர்'... 'கொரோனா வார்டில் அமர்க்களம்'... 'மனைவியுடன் எஸ்கேப்'... பரபரப்பு சம்பவம்!
- BREAKING: ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி...' என்ன மீட் பண்ணவங்க உடனே 'இத' பண்ணுங்க...! - ட்விட்டரில் வேண்டுகோள்...!
- 'கொரோனா தடுப்பூசி'... 'மே 1ஆம் தேதி முதல் இந்த வயதுக்கு மேற்பட்டோர் போடலாம்'... மத்திய அரசு!
- 'என் கணவருக்கு முத்தம் கொடுக்கணும்னா எப்படி கொடுப்பேன்'... 'இப்போ நாங்க என்ன சொல்லிட்டோம்'...'போலீசாரிடம் சீறிய பெண்'... வைரலாகும் வீடியோ!
- 'வேணும்னே அப்படி சொல்லல...' 'ஆக்சுவலா நான் என்ன சொல்ல வந்தேன்னா...' - முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்த மன்சூர் அலிகான்...!
- ‘வேலைக்கு லேட்டான அவசரத்தில் வண்டியை சரியா பூட்டாம சென்ற பெண்’!.. திடீரென செல்போனுக்கு வந்த 10 மெசேஜ்.. சென்னையில் நடந்த அதிர்ச்சி..!
- VIDEO: 'விட்டா போதும்டா சாமின்னு...' 'தெறிச்சு ஓடிய பொதுமக்கள்’... 'ஏதும் செய்ய முடியாமல்... முழிபிதுங்கி நின்ற ரயில்வே ஊழியர்கள்...! - வைரல் வீடியோ
- ‘மிரட்டும் கொரோனா பாதிப்பு’!.. இனி ஞாயிற்றுக்கிழமை தோறும் ‘முழு ஊரடங்கு’.. அதிரடியாக அறிவித்த மாநிலம்..!