'சொன்னதை செய்த பிரசாந்த் கிஷோர்'... 'ஐபேக்யில்(I-Pac) இருந்து விலகுகிறேன்'... 'பரபரப்பு காரணம்'... வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாஐபேக் நிறுவனத்தில் இருந்து விலகுவதாக பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார்.
என் இந்த ட்வீட்டை மறக்காமல் சேமித்து வையுங்கள், பாஜக இதைத்தாண்டி வென்றால் நான் என் தொழிலையே விட்டு விடுகிறேன்” என்று பேசியிருந்தார்.
நாட்டின் பல்வேறு கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுக்கும் நிறுவனமான ஐபேக் நிறுவனத்தின் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க-வுக்கும், மேற்கு வங்கத்தில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் தேர்தல் உத்தி வகுப்பாளராக செயல்பட்டார்.
பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் அமைத்துக் கொடுத்த வியூகங்களின் அடிப்படையில்தான் திமுக இந்த தேர்தலை எதிர்கொண்டது. திமுகவினரின் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல், உங்கள் தொகுதியில் ஸ்டாலின், புகார் மனுக்கள் பெறுவது உள்ளிட்ட திமுகவின் பிரசாரத் திட்டங்கள் அனைத்தும் பி.கே.வின் ஐபேக் நிறுவனம் அமைத்து கொடுத்ததே.
மேற்கு வங்கத்தை பொறுத்தவரை தேர்தலுக்கு முன்பாக 200 இடங்கள் எடுப்போம், அறுதிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியமைப்போம் என்று பாஜக தலைவர்கள் வீரவசனம் பேசிய போது திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் உத்தி வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் பாஜக மேற்கு வங்கத்தில் இரட்டை இலக்கத்தை பெற்றால், தன்னுடைய அரசியல் வியூகம் செய்யும் பணியை விட்டே விலகி விடுகிறேன் என கூறியிருந்தார்.
முன்பு தன்னுடைய ட்விட்டர் பதிவில், ''பாஜகவை தூக்கிப் பிடிக்கும் மீடியாக்கள் கொடுக்கும் ஊதிப்பெருக்கல் செய்திகள் ஒருபுறம் ஆனால் பாஜக மேற்கு வங்கத்தில் இரட்டை இலக்க இடங்களைக் கடக்கவே போராட வேண்டியிருக்கும். என் இந்த ட்வீட்டை மறக்காமல் சேமித்து வையுங்கள், பாஜக இதைத்தாண்டி வென்றால் நான் என் தொழிலையே விட்டு விடுகிறேன்” என கூறியிருந்தார்.
தற்போது அதை மெய்ப்பிக்கும் வகையில் தான் ஐபேக்யில் இருந்து விலகுவதாக அதிரடியாக தெரிவித்துள்ளார். NDTV செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இதனை அதிரடியாக அறிவித்துள்ளார். அதில் தனது மனைவி மற்றும் குழந்தைகளோடு தனது நேரத்தை செலவிட போவதாக தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்