'நிர்வாண பார்ட்டி நடந்த போறோம்'... 'வைரலான போஸ்டர்'...எங்க வந்து இத பண்றீங்க...'நெட்டிசன்கள் காட்டம்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நிர்வாண பார்ட்டி நடக்க இருப்பதாக ஒட்டப்பட்ட போஸ்டர் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுற்றுலாவிற்கு கேளிக்கைக்கும் பெயர் போனது கோவா. பார்ட்டி நகரம் என அழைக்கப்படும் கோவாவில் இந்திய சுற்றுலா பயணிகள் உட்பட, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை என்பது எப்போதுமே அதிகமாக காணப்படும். இந்நிலையில் கோவாவின் வடக்கு பகுதியில் நிர்வாண பார்ட்டி நடக்க இருப்பதாகவும் இதில் 10-15 வெளிநாட்டு பெண்களும் பத்துக்கும் மேற்பட்ட இந்தியப் பெண்களும் கலந்துகொள்ள இருப்பதாகவும் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.

இந்த பார்ட்டி எங்கு, எப்போது நடைபெற இருக்கிறது போன்ற விவரங்கள் அதில் இடம்பெறவில்லை. இந்த பார்ட்டி போஸ்டர், சமூக வலைத்தளங்களில் நேற்று வைரலானது. இது சமூகவலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே இந்த போஸ்டர் விவகாரம் கோவா மாநில மகிளா காங்கிரஸ் தலைவர் பிரதிமா கோட்டின்ஹோவின் கவனத்திற்கு சென்றது.

இதையடுத்து முதலமைச்சர் பிரமோத் சாவந்தும் சுற்றுலாத்துறை அமைச்சர் மனோகரும் இதுபோன்ற நிகழ்ச்சி நடக்காமல் இருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதனைத்தொடர்ந்து இந்த விவகாரம் காவல்துறையின் கவனத்திற்கு சென்றது. உடனடியாக சோதனையை தீவிரப்படுத்திய காவல்துறையினர், நிர்வாணா பார்ட்டியினை நிச்சயம் அனுமதிக்க மாட்டோம் என கூறியுள்ளனர்.

NUDE PARTY, GOA, NORTH GOA SURFACES

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்