Pooja Gehlot: "தங்கம் வெல்ல முடியல.!" - மன்னிப்பு கேட்ட பூஜா.. "மன்னிப்புலாம் கேட்காதீங்க".. பிரதமர் மோடி உருக்கமான ஆறுதல்.!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

Birmingham: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கம் வென்றதற்காக இந்திய வீராங்கனை பூஜா கெலாட் உணர்ச்சிவசப்பட்டு அழுதுள்ளார். இதனைத் தொடர்ந்து அவருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் தெரிவித்து ட்வீட் பதிவிட்டுள்ளார்.

Advertising
>
Advertising

கடந்த 2019-ல், U23 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் 53 கிலோ பிரிவில் வெள்ளி வென்றதன் மூலம் கவனம் ஈர்த்தவர் பூஜா கெலாட். இதனால் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்ற 2-வது இந்தியப் பெண்மணி என்கிற பெருமையையும் அடைந்தார்.

ஆனால் பின்னர், தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக 2 வருடம் ஆடாமல் இருந்த இவர், ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் காமன்வெல்த் தொடர் மூலமாக ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.  அதன்படி, நேற்று பர்மிங்காமில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், பெண்களுக்கான 50 கிலோ ஃப்ரீஸ்டைல் ​​மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை பூஜா கெலாட் கலந்துகொண்டு வெண்கல பதக்கம் வென்றிருந்தார். இருப்பினும் வெண்கலப் பதக்கம் வென்றுவிட்டோமே, தங்கம் வெல்ல முடியவில்லையே என்கிற தமது ஆதங்கத்தை வெளிப்படுத்திய Pooja Gehlot பத்திரிகையாளர்களிடையே பேசும்போது தமது வருத்தத்தை வெளிப்படுத்தினார்.

அப்போது தழுதழுத்த குரலில் கண்ணீர் மல்க பேசிய பூஜா, “அனைவரிடமும் நான் மன்னிப்பு கோருகிறேன். இந்த மண்ணில் நான் தங்கம் வென்று நம் தேசிய கீதத்தை ஒலிக்கவைக்க விரும்பினேன். ஆனால், அது நடக்கவில்லை. எனது இந்த தவறுகளில் இருந்து நான் பாடம் கற்றுக்கொண்டு அவற்றையெல்லாம் அடுத்து சரி செய்ய வேண்டும்” என்று எமோஷனலாக பேசினார்.

இந்நிலையில் தான், பூஜாவின் இந்த பேட்டி வீடியோ பதிவை பகிர்ந்த, இந்திய   பிரதமர் மோடி,  “பூஜா, நீங்கள் ஜெயித்துள்ள இந்த பதக்கம், கொண்டாட்டத்துக்கு உரித்தானதே...  உங்கள் பதக்கம் அதற்குத்தான் அழைப்பு விடுக்கிறதே அன்றி மன்னிப்புக்கு அல்ல. எங்களுக்கெல்லாம் உங்கள் வாழ்க்கை பயணம் உதேவேகம் தருகிறது.

மேலும் உங்களது இந்த வெற்றி எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எதிர்காலத்தில் நீங்கள் உயர்ந்த பல விஷயங்களுக்காக விதிக்கபடுகிறீர்கள்.. ஒளிமயமாக இருங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

 

NARENDRAMODI, NARENDA MODI, POOJA GEHLOT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்