'பீஸ் கட்டுறேன்னு சொன்னேனே...' 'அதிகாலை கண் விழித்தபோது...' 'திருமணம் முடிந்து 10 மாசத்துல...' - மனைவி எடுத்த விபரீத முடிவு...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகல்லூரி கட்டணம் செலுத்த காதல் கணவர் பணம் அளிக்காததால் 20 வயது இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாவட்டம் வீராம்பட்டினம் அப்துல் கலாம் நகரைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகள் 20 வயதான தேவிகா. இவர் கிருமாம்பாக்கம் அருகே உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் லேப் டெக்னீசியன் படிப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் தேவிகா கடந்த 10 மாதங்களுக்கு முன் வீராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகனை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
தற்போது இந்த கொரோனா ஊரடங்கில், கணவன் மனைவி இருவருக்கும் கல்லூரி படிப்பு தொடர்பாக அடிக்கடி சண்டை எழுந்துள்ளது.
இந்நிலையில் அதிர்ச்சியளிக்கும் வகையில் நேற்று இரவு அனைவரும் தூங்கி கொண்டிருக்கும் சமயத்தில் தேவிகா தூக்கு மாட்டி தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
தேவிகாவின் கணவர் பாலமுருகன் அதிகாலையில் எழுந்து பார்த்தபோது தேவிகா தூக்கில் தொங்குவதை கண்டு வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து, அரியாங்குப்பம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தேவிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த அரியாங்குப்பம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தேவிகா தனது கல்லூரி படிப்பிற்கு கட்டணம் செலுத்த தன் கணவரிடம் பணம் கேட்டுள்ளார். தற்போதைய ஊரடங்கு நீதி நெருக்கடியால் கணவர் பாலமுருகனால் பணம் கொடுக்க முடியவில்லை. சிறிது நாட்கள் பொறுக்குமாரும் கூறியுள்ளார். ஆனால் இதனை காரணம் காட்டி கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மனமுடைந்த தேவிகா தற்கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
திருமணமான 10 மாதங்களிலேயே தேவிகா எடுத்த இந்த விபரீத முடிவு அப்பகுதி மக்களையும், அவரின் குடும்பத்தாரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- '16 வயசு மகளையும் ஏமாத்தி கூட்டிட்டுபோனோம்'... 'கணவரும் வந்து கெஞ்சினாரு'... 'மனைவி, மகளின் காதலன் கொடுத்த'... 'அதிரவைக்கும் வாக்குமூலம்!'...
- "1 வயசுல குழந்தைய வெச்சுட்டு இப்படியா ஆகணும்?" - 'WhatsAppல் வந்த ஆடியோவைக் கேட்டு'... 'நொறுங்கிப்போன குடும்பம்'!!!
- 'மச்சான் அப்போ பாண்டிச்சேரி பிளான்'?... 'அதிகரிக்கும் கொரோனா'... வெளியான புதிய உத்தரவு!
- 'பண்றதெல்லாம் பண்ணிட்டு'... 'மகனுக்கு ஃபோன் போட்ட தந்தை'... 'பேரதிர்ச்சிக்கு உள்ளான மகன்!'...
- '6 மணி நேரம்தான் அந்த தடயம் இருக்கும் ஆனா'... 'சுஷாந்த் மரண வழக்கில்'... 'பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள புதிய தகவல்!'...
- "கூடவே இருந்தாரு... ஆனா, அதுக்கு அப்பறம்தான் தெரிஞ்சுது"... 'தந்தை செய்த காரியத்தால்'... 'நிலைகுலைந்து நிற்கும் குடும்பம்!'...
- "ஒரு வாரத்துல கல்யாணம்'... 'எல்லாமே பாத்து பாத்து செஞ்சோம்'... 'அதுக்குள்ள இப்படி பண்ணிட்டானே...!” - அண்ணனால், 'அட்வகேட்' செய்த திடுக்கிடும் காரியம்...!
- "இனிமே 'இ பாஸ்' எல்லாம் தேவையில்ல"... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட 'மாநிலம்'!!
- 'மதுபோதையில் புதுமாப்பிள்ளை செய்த கொடூரம்'... 'மர்மமான முறையில் இறந்துகிடந்த தாய்'... 'பின்னர் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்!'...
- 'பணப் பிரச்சனை, பட வாய்ப்பில் சிக்கலா?'... '2-3 வருஷத்துல சம்பாதிச்சது மட்டும் இத்தனை கோடி!'... 'வெளியான முக்கிய தகவல்'...