நீதி வேண்டும், நியாயம் வேண்டும்...! 'பல தடவ கேட்டுப் பார்த்தாச்சு...' 'ரெஸ்பான்ஸ் இல்ல...' - அப்பாவிற்கு எதிராக 'போராட்டத்தை' தொடங்கியுள்ள மகன்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தன் மருத்துவ படிப்புக்காக கல்வி கட்டணம் செலுத்தவேண்டும் என தந்தை வீட்டின் முன் தர்ணாவில் இறங்கியுள்ளார் மகன்.

பிரசன்ன சாரதி என்னும் மருத்துவ மாணவர், பாண்டிச்சேரி அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர். இவர் தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் எம்.பி.பி.எஸ்., மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

மருத்துவ மாணவர் பிரசன்ன பாரதியின் பெற்றோர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக  பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதில் பிரசன்னா தனது தாயுடன் வசித்து வந்தார்.

பிரசன்னாவை அவரின் தாயாரே படிக்க வைத்து, மருத்துவ படிப்புக்காக கட்டணத்தை செலுத்தி வந்துள்ளார். ஆனால் கடந்த மே மாதம் பாரதியின் தாய் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதன் காரணமாக பிரசன்ன பாரதிக்கு மருத்துவ படிப்புக்கான  கல்வி கட்டணத்தை கட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக பிரசன்னா பாரதி தன் தந்தையிடம் கல்வி கட்டணம் செலுத்துமாறு கோரியுள்ளார். ஆனால் ஒன்றுக்குப் பலமுறை கேட்டும் அவரின் தந்தை அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தான் மாணவர் பிரசன்னா நேற்று வீராம்பட்டினம் சாலையில் உள்ள அவரின் தந்தை இல்லத்தின் வாசல் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். 'நீதி வேண்டும், நியாயம் வேண்டும்' என்ற பதாகையுடன் பிரசன்ன பாரதி தனது நண்பர்கள் படைசூழ, தந்தையை எதிர்த்து கல்விக்காக ஒரு சத்தியாகிரகப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதன்பின் சம்பவ இடத்திற்கு வந்த அரியாங்குப்பம் காவல் நிலைய போலீசார், மாணவன் மற்றும் குடும்பத்தினரிடையே சமாதனம் செய்ய முயற்சி செய்து வருகின்றனர்.அதோடு, மாணவர் பிரசன்னாவிற்கு ஆதரவாகவும் பலர் குரல் கொடுத்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்