’பிரான்ஸ்’ நாட்டில் உள்ளது போல்... நம்ம ஊரிலும் ’காதல் மரம்’! - தங்கள் காதல் நிலைத்து நிற்க... ஜோடி ஜோடியாக வந்து பூட்டு போட்டுவிட்டு செல்லும் காதலர்கள்...!
முகப்பு > செய்திகள் > இந்தியா"பிரெஞ்சு கலாச்சாரத்தின் ஜன்னல்" என்ற பெருமை புதுச்சேரிக்கு உண்டு. பிரெஞ்சு உணவு, பிரெஞ்சு காலத்து கட்டிடங்கள், பிரெஞ்ச் பெயர்களை தாங்கிய சாலைகள் என சுற்றுலா பயணிகளை புதுச்சேரி ஈர்த்து வருகிறது. அந்த வரிசையில் புதிதாக இடம் பெற்றிருப்பது "லவ் லாக்" மரம். இதனை தனியார் உணவக உரிமையாளர் சத்தீஷ் என்பவர் அமைத்துள்ளார்.
சுய்ப்ரேன் வீதியில் அலங்கார விளக்கை அமைத்து அதில் காதல் பூட்டுக்களை மாட்டுவதற்கு ஏற்பாடு செய்துள்ளார். கடந்த 2008-ம் ஆண்டு முதல் காதலர்கள் பூட்டுபோட்டு சாவியை ஆற்றில் வீசியும், அதனை பத்திரப்படுத்தியும் வந்தனர். பின்னர் காதலர்களின் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக மாறியதால் அங்கேயே சில ஜோடிகள் தங்கள் திருமணத்தை நடத்தினர்.
இந்த நிலையில், பாலம் முழுவதும் பூட்டுகளால் நிரம்பியதை அடுத்து அதனை தடுக்கும் வகையில் தற்போது பூட்டுப் போட தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் அங்குள்ள லவ் லாக் ட்ரீ எனப்படும் கம்பங்களில் காதலர்கள் தங்களது காதலை வெளிப்படுத்தும் வகையில் இன்றும் பூட்டு போட்டுக்கொண்டுதான் வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் தேசம் கடந்த நேசங்கள் பூத்து குலுங்கும் லவ் லாக் ட்ரீ முன்பு நின்று புகைப்படம் எடுத்தும் மகிழ்கின்றனர்.
தங்கள் காதலின் அடையாளத்திற்கு பூட்டுப்போடும் கலாச்சாரம் நமது மண்ணின் காதலர்களிடமும் புகுந்து தற்போது புகழ்பெற்று வருகின்றது. தற்போது எண்ணற்ற காதலர்களும் இங்கே வந்து குவிகின்றனர். இதனால் சுய்ப்ரேன் வீதியில் உள்ள இந்த லவ் லாக் ட்ரீ தற்போது காதலர்களின் முக்கிய ஹாட்ஸ்பாட்டாக மாறியுள்ளது.
மற்ற செய்திகள்
வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை!.. மத்திய அரசு புதிய திட்டம்!.. யாருக்கு சாதகம்?.. யாருக்கு பாதகம்?
தொடர்புடைய செய்திகள்
- கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி.. புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு..!
- வெளுத்து கட்டிய நிவர் புயல்!.. 2000 வீடுகளில் புகுந்த மழைநீர்!.. சிக்கித் தவிக்கும் பொதுமக்கள்!
- 'வீட்டிலிருந்த படியே புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதலாம்'!.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பல்கலைக்கழகம்!.. மாணவர்கள் அதிர்ச்சி!
- 'என்ன ஆபாச படம் பாக்க சொல்றாரு'... 'கதறிய 19 வயது மாணவி'... 'பதறாம யாருன்னு சொல்லுமா'... பதிலை கேட்டு ஆடிப்போன போலீசார்!
- 'வீட்டுக்குள்ளயே இருங்க, வெளிய வர வேணாம்' ... மதுக்கடைகளுக்கு க்ளோஸ் ... புதுச்சேரிக்கு 144!
- ‘எவ்வளவு சொன்னாலும் கேக்கல...’ ‘ஆட்டுக்கல்லை எடுத்து அப்படியே தன் மனைவியின்...’ லேட்டாக வந்ததால் கணவன் வெறிச்செயல்...!
- முன்ன மாதிரிலாம் என்ன 'லவ்' பண்றதே இல்ல சார்...! 'காதலியுடன் பைக்கில் சென்ற கணவனை சேஸ் பண்ணி...' கையும் களவுமாக மாட்டிக்கிட்ட சம்பவம்...!
- ‘ஆசையாக’ கணவரிடம் ‘ஃபோனில்’ பேசிக்கொண்டிருந்த மனைவிக்கு... ‘அடுத்த’ நொடி நடந்த பயங்கரம்... ‘பதறவைக்கும்’ சம்பவம்...
- ‘மாப்பிள்ளை வீட்டார்’ பார்த்துச் சென்றபின்.. இளம்பெண் எடுத்த ‘விபரீத முடிவு’.. இறப்பதற்கு முன் கொடுத்த ‘அதிர்ச்சி வாக்குமூலம்’..
- ‘கார் ஏசி வெடித்து பயங்கர விபத்து’.. ‘திருமணத்திற்கு ஒரு மாதமே உள்ள நிலையில்’ .. ‘இளைஞருக்கு நேர்ந்த சோகம்’..