’திருமண விடுப்பு' தராத மேலதிகாரி.. 13 முறை துப்பாக்கியால் சுட்ட காவலர்.. தேர்தல் பணியின்போது சோகம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

திருமணம் நடக்கவுள்ள தனக்கு விடுப்பு அளிக்காமல் பணிச்சுமைகளைத் தந்ததால் மேலதிகாரியை, தேர்தல் பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் ஒருவர் சுட்டுக்கொன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவுக்கு உட்பட்ட ஹவுரா மாவட்டத்தில் ஆயுதப்படை வீரர் லக்‌ஷ்மிகாந்த் பர்மன். அஸ்ஸாமைச் சேர்ந்த இவர், மன உளைச்சலாம், திடீரென மன நிலை பிறழ்ந்த இவர் செய்த காரியத்தால் இவரது மேலதிகாரி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் 2 சக வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

மே 23-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நிகழவுள்ள நிலையில், ஹவுரா தொகுதியில் 6-ஆம் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்தது.  இதில் தேர்தல் பணியில் இருந்த லஷ்மிகாந்த் பர்மன், அங்குள்ள பக்னன் கேம்ப்பில் தன்னுடைய மேலதிகாரியான அசிஸ்டண்ட் சப்-இன்ஸ்பெக்டர் போலன்நாத் தாஸ், அனில் ராஜ்பன்ஸி, ரண்ட்டு மணி உள்ளிட்டோரை சுட்டுள்ளார். இவர்களுள் போலன்நாத் தாஸ் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார். ஏனையவர்கள் உயிருக்கு போராடி வருகின்றனர்.

ஆனால் இதுபற்றி பேசிய அதிகாரிகள், மத்திய ஆயுதப்படை பிரிவு வீரரான லஷ்மிகாந்த் தனக்கு  வரும் மே மாதம் 20-ஆம் தேதி நிகழவுள்ள திருமணத்தை காரணம் காட்டி ஒரு வாரம் விடுப்பு அளித்ததாகவும், ஆனால் விடுப்பு தர மறுத்ததோடு தனக்கு அதிக பணிகளைக் கொடுத்ததாகவும் தனது மேலதிகாரியை சுட்டதாக தெரிவித்துள்ளனர். முதலில் அவர் ஒருமுறை தனக்கு அளிக்கப்பட்ட துப்பாக்கியை எடுத்து சுட்டதும், அவரை கேம்ப்பில் இருந்த கான்ஸ்டபிள் போதக் வந்து அடித்து, பிடித்துத்தள்ளி லஷ்மிகாந்திடம் இருந்து துப்பாக்கியை தட்டிவிட்டுள்ளார். ஆனால் லஷ்மிகாந்த்தோ போதக்கின் துப்பாக்கியை பறித்து தனது மேலதிகாரியை சுட்டுள்ளார்.

மேலும் 13 முறை தொடர்ந்து சுட்டுள்ளார். பின்னர் தப்பியோட முயன்ற லஷ்மிகாந்த் சக காவலர்களால் பிடிக்கப்பட்டார். இதனையடுத்து லஷ்மிகாந்த்திற்கு மன நல பரிசோதனை செய்யச் சொல்லி, மாவட்ட மேஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.  இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

LOKSABHAELECTIONS2019, GUN SHOTS, JAWAN, HOWRAH, BIZARRE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்