‘அம்மா இறந்திட்டாங்கன்னு போன் வந்தது’.. ‘லீவ் குடுத்தும் நான் ஊருக்கு போகல’!.. கண்கலங்க வைத்த காரணம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு காவலர் ஒருவர் தனது தாயின் இறுதி சடங்கிற்கு செல்லாமல் இருந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ரயில்வே காவல் உதவி ஆய்வாளர் ஷாண்டராம். இவர் கடந்த சனிக்கிழமை விஜயவடா ரயில்வே ஸ்டேசன் பகுதியில் ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்துள்ளார். அப்போது அவருக்கு செல்போனில் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் அவரது தாய் சீதாமகாலட்சுமி (69) உடல்நலக்குறைவால் மரணமடைந்ததாக தெரிவித்துள்ளனர். இதற்காக அவருக்கு உடனே விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஷாண்டராம் தனது தாயின் இறுதி சடங்கிற்கு செல்லவில்லை.
இதுகுறித்து அறிந்த இன்ஸ்பெக்டர் பங்கர்ராஜூ, ஏன் தாயின் இறுதி சடங்கிற்கு செல்லவில்லை என விசாரித்துள்ளார். அதற்கு காவலர் ஷாண்டராம், ‘தாயின் இறுதி சடங்கிற்கு செல்லவேண்டுமென்றால் 4 மாவட்டம், 40 ஷெக்போஸ்டுகளை தாண்டி செல்ல வேண்டும். அங்கு சென்றால் அதிக மக்களுடன் பேச வேண்டி வரும். ஒருவேளை இதனால் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் எனது தம்பியிடம் தாயின் இறுதி சடங்கை செய்ய சொன்னேன். இதை செல்போனில் வீடியோ கால் மூலம் பார்த்து என்னை நானே ஆற்றிக்கொண்டேன்’ என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து பேசிய இன்ஸ்பெக்டர் பங்கர்ராஜூ, ‘இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில்தான் நாங்கள் பணியாற்றி வருகிறோம். ஷாண்டராமுக்கு லீவ் கொடுக்கப்பட்டும் கொரோனா பரவலை எண்ணி தாயின் இறுதி சடங்கிற்கு செல்லவில்லை. தயவு செய்து எங்களது நிலைமையையும் புரிந்துகொள்ளுங்கள். இன்னும் இரண்டு வாரங்களுக்கு வீட்டிலேயே இருங்கள். நம்மால் கண்டிப்பாக கொரோனா வைரஸை சமாளிக்க முடியும்’ என பேசியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘இரண்டாம் உலகப் போரையே பார்த்தாச்சு’... ‘கொரோனா எல்லாம் நமக்கு’... ‘மீண்டு வந்து’... ‘104-வது பர்த்டே கொண்டாடிய முன்னாள் ராணுவ வீரர்’!
- ‘10 பேருக்காவது கால் பண்ணுங்க’.. ‘அவங்கள வீட்ல இருக்க சொல்லுங்க’.. கொரோனாவில் இருந்து பாதுகாக்க முதல்வர் ட்வீட்..!
- 'கேஸ் சிலிண்டர்' விநியோகிக்கும் ஊழியர்களுக்கு 'பாத பூஜை'... 'மஞ்சள் நீரால்' கழுவி, சந்தனம், குங்குமம் இட்டு 'நன்றி'... 'உரிமையாளர்' செய்த 'வியக்க வைக்கும்' செயல்...
- 'ஆட்டை கசாப்பு கடைக்கு கொண்டு போவாங்கல'...'கதறிய பெண் மருத்துவர்'... அதிரவைக்கும் காரணம்!
- 'கொரோனா' பாதிக்கப்பட்ட ஒரு 'நோயாளிக்கு...' 'ஒரு நாளைக்கு' ஆகும் 'மலைக்க வைக்கும்' செலவு... 'கேரள சுகாதாரத்துறை அறிவிப்பு...'
- ‘தமிழகத்தில் 411 ஆக அதிகரித்த கொரோனா பாதிப்பு’... ‘நாம் எந்த கட்டத்தை அடைந்துள்ளோம்’... 'சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்’!
- மூடப்பட்ட 'ஆட்டிறைச்சி' கடைகள்... சிக்கனுக்கு வந்த 'திடீர்' கிராக்கி... வெலைய பார்த்தாலே 'ஷாக்' அடிக்குதே!
- கொரோனா ஊரடங்கால் ‘குவியும் ஆர்டர்கள்’.. 10,000 பேரை வேலைக்கு எடுக்கும் ‘பிரபல’ நிறுவனம்..!
- 'நமக்கு புடிச்சவங்கள கடைசியா ஒரு தடவ பார்க்க முடியாதது எவ்வளவு கொடுமை!?'... மரணத்தை மிஞ்சிய வலிகளைக் கொடுக்கும் கொரோனா!... இதயத்தை நொறுக்கும் சோகம்!
- ‘எல்லாத்துக்கும் சீனாவோட’... ‘அந்த மார்கெட் தான் காரணம்’... ‘அதனை க்ளோஸ் பண்ண’... 'ஐ.நா., WHO -க்கு’... ‘கொந்தளித்த பிரதமர்’!