'தெருவில்' படுத்துறங்கிய 'போலீஸ்'... "கெடச்ச கேப்புல குட்டி தூக்கம்".. போலீசார்களின் தற்போதைய நிலையை விளக்கும் வைரல் புகைப்படம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் தேவையில்லாமல் நடமாடுவதை கண்காணிக்க நாடு முழுவதும் போலீசார் இரவு பகல் பாராமல் அயராது உழைத்து வருகின்றனர்.
இந்நிலையில், அருணாச்சல பிரதேச மாநிலத்தை சேர்ந்த இரண்டு போலீசார்கள் தெருவில் படுத்து உறங்கும் புகைப்படம் ஒன்று இணையதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை அருணாச்சல பிரதேசம் டிஐஜி மதுர் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதனுடன், 'இது போன்ற 8 மணி நேர தூக்கம் விலையுயர்ந்த மெத்தை இல்லையென்றால் கிடைக்குமா?... கிடைக்கும் நீ ஒரு போலீசாக இருந்தால்.. இவர்களை நினைத்து நான் பெருமை கொள்கிறேன்' என்ற கேப்ஷனும் அந்த புகைப்படத்துடன் இடம்பெற்றிருந்தது.
கடினமான பணிச்சுமை காரணமாக ஓய்வின்றி உழைத்து வருவதால் கிடைக்கும் இடங்களில் ஓய்வெடுத்து வரும் நிலையில் போலீசாரின் தற்போதைய கடினமான சூழ்நிலையை விளக்கும் இந்த புகைப்படம் நெட்டிசன்களிடையே அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கொரோனாவால் உயிரிழந்தவர் உடல் 'அடக்கத்தை' தடுத்தால்... 'எச்சரித்து' அவசர 'சட்டம்'... தமிழக அரசு 'அதிரடி'...
- ‘ஒருமாத ஊரடங்கால் என்ன நடந்தது?’... ‘ஆனாலும் அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்’... ‘நாட்டிலேயே இங்கு தான் குறைவு’!
- காற்றில் பறந்து வந்த ‘மாஞ்சாநூல்’.. டூட்டி முடிந்து பைக்கில் போன காவலருக்கு நேர்ந்த பரிதாபம்..!
- 'உலக' நாடுகள் 'உறைந்து' நிற்கும் வேளையில்... 'இந்தியாவில்' மட்டும் 'இது' எப்படி சாத்தியம்?... 'குழப்பத்தில்' நிபுணர்கள்...
- “வேட்டைக்காரன் பரம்பரைடா.. வேட்டையாட வாரேண்டா!”.. 'உடும்பை' வேட்டையாடிவிட்டு 'இளைஞர்கள்' பார்த்த 'வேலை'!
- 'ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரர்...' 'மீண்டும் முகேஷ் அம்பானி முதலிடம்...' 'சீனா தொழிலதிபர் ஜாக்மாவை பின்னுக்குத் தள்ளினார்...'
- ‘அதிவிரைவு சோதனை மெஷின்களை’... ‘இந்தியாவிற்கு வழங்க முன்வந்துள்ள நாடு’... ‘ஒரேநேரத்தில் இத்தனை ஆயிரம் பேருக்கு’... ‘சோதனை செய்ய முடியும்’!
- VIDEO: புதருக்குள் இருந்த ‘காதல்ஜோடி’.. பறந்து வந்த போலீஸ் ‘ட்ரோன்’.. ‘ஐய்யோ ஓடு..ஓடு..’ வைரல் வீடியோ..!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- ‘இந்திய பேட்ஸ்மேன்கள் அணிக்காக ஆட மாட்டாங்க’... ‘இதற்காகத்தான் விளையாடுறாங்க’... 'சர்ச்சையை கிளப்பிய முன்னாள் கேப்டன்’!