"டைம் முடிஞ்சுது, கடையை சீக்கிரம் மூடுங்க"... எச்சரித்த 'போலீசார்'... 'மறுத்த' கடைக்காரர்கள்... அடுத்து நடந்த 'பரபரப்பு' சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா வைரஸ் தீவிரமடைந்ததன் காரணமாக மே மாதம் மூன்றாம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து மக்கள் தேவையில்லாமல் வெளியே சுற்றித் திரிவதை கண்காணிக்க நாடு முழுவதும் போலீசார் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து கடைகளும் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே திறந்து வைக்க வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தி வருகிறது. விதிகளை மீறி செயல்படுவோர் மீது போலீசார் நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் ஊரடங்கு நேரத்தை தாண்டி இயங்கப்பட்ட கடைகளை போலீசார் மூட சொல்லியுள்ளனர். அதை கேட்காமல் அப்பகுதியிலுள்ள கடைக்காரர் போலீசார்களுடன் மோதலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. ஊரடங்கின் போது இப்படி விதிகளை மதிக்காமல் போலீசாருடன் அடிதடியில் ஈடுபடும் சம்பவம் அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்