சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய டி.ஐ.ஜி ஒருவரே, சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்து தலைமறைவாகியுள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில், டி.ஐ.ஜி-யாக இருப்பவர், நிஷிகாந்த் மோர். கடந்த ஜூன் மாத்தத்தில், 17 வயது இளம் பெண்ணிடம் அவர் தவறாக நடக்க முயன்றுள்ளார். இது குறித்து, போலீஸில் அந்தப் பெண் புகார் கொடுத்திருக்கிறார். புகாரை ஏற்க மறுத்த போலீசார், 6 மாதம் கழித்து டிசம்பர் 26-ம் தேதி நிஷிகாந்த் மோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதனால், தான் கைது செய்யப்படலாம் என அஞ்சி அவர் தலைமறைவாகியுள்ளார்.
இந்நிலையில், டி.ஐ.ஜி தரப்பிலிருந்து புகாரை வாபஸ் வாங்குமாறு அந்தப் பெண்ணின் குடும்பத்துக்கு மிரட்டல் வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, தற்கொலை செய்துகொள்ளப் போவதாக வீட்டில் கடிதம் எழுதி வைத்துவிட்டு சிறுமி வெளியேறியுள்ளார். ஆனால், டி.ஐ.ஜி ஆதரவாளர்கள் தான் அந்தப் பெண்ணைக் கடத்திச் சென்றிருப்பதாகப் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சினை பூதாகரமானதும், குற்றச்சாட்டுக்குள்ளான போலீஸ் டி.ஐ.ஜி மீது மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், நிஷிகாந்த் மோருக்கு உதவியாக இருந்த டிரைவர் மற்றும் கான்ஸ்டபிள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிர மாநில டி.ஜி.பி-க்கு இச்சம்பவம் குறித்து அறிக்கை அளிக்கப்பட்டுள்ள நிலையில், டி.ஐ.ஜி மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்
“பொங்கலுக்கு கரும்போட வந்துருங்க!”.. கொலைக் குற்றவாளியை பிடிக்க போலீஸார் போட்ட “வேற லெவல்” ஸ்கெட்ச்!
VIDEO: ‘சிக்ஸ் அடிச்ச அடுத்த பந்தே விக்கெட்’.. விராட் கோலியை 4 முறை அவுட்டாக்கிய ஆஸ்திரேலிய வீரர்..!
தொடர்புடைய செய்திகள்
- ‘கல்யாணம் பண்ணச் சொல்லி டார்ச்சர் செய்த காதலி’.. கொடூர முடிவெடுத்த ஜோதிடர்..! வெளியான பரபரப்பு வாக்குமூலம்..!
- கணவன்-மனைவி தகராறில் 'விஷம்' குடித்து... உயிருக்கு 'போராடிய' புதுமாப்பிள்ளை... சிகிச்சை பலனின்றி பலி!
- பர்த் டே விஷ் பண்ண வந்த பாட்டியம்மா... கலைந்து கிடந்த பொருட்கள்... 3 வயது குழந்தைக்கு... அம்மாவால் நிகழ்ந்த கொடூரம்... உறைந்து போக வைத்த சம்பவம்!
- 'கூலி' வேலை செஞ்சு வாங்கி கொடுத்தேன்... 'டிக் டாக்' காதலால் கர்ப்பமான 'சிறுமி' தீக்குளித்து தற்கொலை... கதறும் பெற்றோர்!
- ‘என் மகள் அப்படிப்பட்டவ இல்ல’.. கல்லூரி மாணவி தற்கொலை விவகாரம்.. சிக்கிய 3 பக்க கடிதம்..!
- ‘3 வருஷமா மனைவியை காணோம்’.. விசாரணையில் கணவன் சொன்ன பகீர் தகவல்.. ஜேசிபி வைத்து தோண்டிய போலீசார்..!
- ‘சென்னையில்’ வேலை முடிந்து வீடு திரும்பிய ‘ஐடி’ ஊழியருக்கு... கண் இமைக்கும் நேரத்தில் நேர்ந்த ‘துயரம்’...
- சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேசனில்... தாயுடன் தூங்கிய குழந்தை... சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்!
- "இளைஞரால் 5 வயது சிறுமிக்கு நடந்த சோகம்..." "ஆத்திரத்தில் உறவினர்கள் செய்த காரியம்?"... "என்ன நடந்தது?"...
- 'படிக்காம' இப்டி ஊர் சுத்துறியே?... கல்லூரி மாணவரை 'கண்டித்த' பெற்றோர்... அடுத்து நடந்த விபரீதம்!