எனக்கு வேற வழி தெரியலங்க...! 'தலையில ஹெல்மெட் போடல...' 'போலீசார் அபராதம் கேட்ட உடனே...' - பெண்மணி செய்த அதிர்ச்சி காரியம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டியதற்கு அபராதம் விதித்த போலீசாரிடம், ஒரு பெண் தான் அணிந்திருந்த தாலியை கழட்டி அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெலகாவி பகுதியை சேர்ந்தவர் பாரதி விபூதி (30). இவர் தன்னுடைய கணவருடன், மோட்டார் பைக்கில் பொருட்கள் வாங்க கடைக்கு சென்றார். அப்போது இவர்கள் ஹெல்மெட் அணியவில்லை.
இவர்கள் தங்களது வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டு இருக்கையில், போக்குவரத்து போலீசார் வரும்வழியில் அவர்களை நிறுத்தினர். ஹெல்மெட் அணியாத குற்றத்திற்காக, அவர்களுக்கு,போக்குவரத்து போலீசார் ரூ.500 அபராதம் விதித்தனர்.
தாங்கள் கடையில் வாங்கிய பொருட்கள் போக, தங்களது கைகளில் ரூ.100 மட்டுமே மீதி இருந்தது. கடைக்கு சென்று கழைப்பானதால், அவர்கள் சிற்றுண்டி சாப்பிட்டுள்ளனர். எனவே அந்த பணமும் காலியானது.
அபராதம் கட்டிவிட்டு தான் இந்த இடத்தைவிட்டு செல்ல முடியும் என போலீசார் கண்டிப்புடன் தெரிவித்து விட்டனர். தங்களிடம் பணம் இல்லை என்று அவர்கள் தெரிவித்தும் போலீசார், அபராதம் கட்டினால் மட்டுமே, வண்டியை விட முடியும் என்று உறுதியாக கூறியுள்ளனர்.
அவர்கள் போலீசாரிடம் கேட்டுப்பார்த்தும் பலன் எற்படாத நிலையில், பாரதி விபூதி திடீரென்று, தான் அணிந்திருந்த தாலியை கழட்டி, அபராத பணத்திற்கு பதிலாக இதை வைத்துக்கொள்ளுங்கள் என்று ககூறியுள்ளார்.
அப்போது அந்த வழியாக வந்த உயர் அதிகாரி நடந்த சம்பவத்தை கேட்டு தெரிந்துக்கொண்டு, அபராதம் எதுவும் வேண்டாம், இனிமேல் ஹெல்மெட் அணிந்துக்கொண்டு வண்டி ஓட்டுங்கள் என அறிவுரை கூறி அனுப்பினார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘சாப்பிட்டது 200 ரூபாய்க்கு’.. ஆனா ‘பார்க்கிங்’ சார்ஜ் இவ்ளோவா.. ‘நல்லா இருக்குங்க உங்க டீலிங்’.. மிரண்டு போன தாத்தா..!
- 'ஒன்லி அந்த பைக் மட்டும் தான் டார்கெட்...' 'வேற எந்த மாடல் பைக்கையும் டச் பண்ணுறது இல்ல...' 'திருட்டுல அப்படி என்ன ethics...? - பகீர் பின்னணி...!
- அதிகாலை 4 மணிக்கு அடித்த போன்!.. "மரத்த வெட்டிட்டாங்க!".. வனத்துறையை அலறவிட்ட சிறுவன்!.. பதறியடித்து ஓடிய அதிகாரிகள்!
- Video: “இல்ல.. எப்படி முடியும்?” - ‘ஒழுங்கா எட்டு கூட போடத் தெரியாத பேயா?’ .. ‘வைரலாகும் வீடியோ’ .. கமெண்ட்டுகளை தெறிக்கவிட்ட நெட்டிசன்கள்!
- 'ஒரு கல்லை மட்டும் ரோட்டுக்கு நடுவுல வச்சிடுவாரு...' 'அடுத்தது எல்லாமே அவர் போட்ட திட்டப்படியே நடக்கும்...' - கடைசியில 'அத' எடுத்திட்டு எஸ்கேப் ஆயிடுவாரு...!
- 'இந்த பைக் வெறும் நாலே செகண்ட்ல...' 'எலன் மாஸ்க் கம்பெனியில இஞ்சினியர்...' - 'வேற லெவல்'ல பைக் செய்து மாஸ் காட்டிய நபர்...!
- ‘என்ன ரொம்ப நேரமா சத்தம் வந்துட்டே இருக்கு’!.. உடனே பைக்கை நிறுத்திய நபர்.. நூலிழையில் தப்பிய உயிர்.!
- ‘என்ன பாய்ஸ் ரெடியா’! சாப்பாடு போட்டியில் ஜெயிச்சா ‘Royal Enfield’ பைக் பரிசு.. அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட ஹோட்டல்..!
- தயவுசெஞ்சு பைக்கை எடுக்குமுன் இதை ‘செக்’ பண்ணுங்க.. நூலிழையில் உயிர்தப்பிய ‘மெக்கானிக்’.. உருக்கமான வேண்டுகோள்..!
- டீ குடிக்க பைக்கில் போன ‘மெக்கானிக்’.. பாதி வழியில் வண்டியை நிறுத்தி கண்ட ‘காட்சி’.. வெலவெலத்துப்போன மக்கள்..!