அம்மாடியோவ்..! இறந்த யாசகர் வீட்டில் கட்டுக்கட்டாக கிடந்த பணம்.. விடிய விடிய எண்ணியும் எண்ணி முடிக்க முடியல.. மிரண்டு போன அதிகாரிகள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாயாசகம் பெற்று வாழ்ந்து வந்தவர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் கரப்பா மண்டலம் வேலங்கி கிராமத்தை சேர்ந்தவர் சாது ராமகிருஷ்ணா. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வேலங்கி கிராமத்திற்கு வந்த ராமகிருஷ்ணா அங்கேயே தங்கி யாசகம் பெற்று வாழ்ந்து வந்தார். வேலங்கி கிராம மீன் மார்க்கெட் அருகில் சிறிய அறையில் தங்கி அருகிலுள்ள ஆசிரமத்தில் உணவருந்தி வாழ்ந்து வந்த நிலையில், நேற்று மாரடைப்பு காரணமாக ராமகிருஷ்ணா உயிரிழந்தார்.
இதனை அடுத்து உள்ளூர் மக்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பஞ்சாயத்து ஊழியர்கள் உதவியுடன் தகனம் செய்தனர். அப்போது ராமகிருஷ்ணா வீட்டில் கிடைத்த 2 பையில் நூற்றுக்கணக்கான பாலிதீன் கவர்களில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் கட்டி வைக்கப்பட்டு இருந்ததை கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் முன்னிலையில் உள்ளூர் மக்கள் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். விடிய விடிய எண்ணியும், முழுமையாக பணத்தை எண்ண முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பணத்தை பையில் போட்டு சீல் வைத்த போலீசார் காவல் நிலையம் கொண்டு சென்றனர். உயிரிழந்த யாசகர் வீட்டில் கட்டுகட்டாக பணம் இருந்த சம்பவம் அப்பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "என்ன 500ரூபா நோட்டு வித்தியாசமா இருக்கு?".. கடைக்காரருக்கு வந்த சந்தேகம்.. வசமாக சிக்கிய பலே திருடன்..!
- சென்னையில் இருந்து ஊருக்கு போன கொஞ்ச நாள்ல அப்பா மரணம்.. கைதான மகன் சொன்ன ‘திடுக்கிடும்’ தகவல்..!
- திருமணத்தை மீறிய உறவு.. தலைமறைவான ஜோடி லெட்டர் எழுதி வச்சுட்டு எடுத்த விபரீத முடிவு.. பரபரப்பில் தூத்துக்குடி..!
- மனைவி வீட்டுல இல்ல..தோட்டத்துல கேட்ட வினோத சத்தம்.. கணவன் செஞ்ச பகீர் காரியத்தால் பதறிப்போன போலீஸ்..!
- மண்டை மேல இருந்த கொண்டைய மறந்த திருடன்.. வழக்கை முடிச்சுவச்ச ஒரேயொரு போட்டோ..!
- கொள்ளை நடந்த வீட்டில் கிடச்ச செல்போன்.. உள்ளே இருந்த போட்டோ.. சென்னையில் நடந்த துணிகரம்..!
- “கடைசியா ஒரு தடவை பேசணும்”.. நம்பி போன இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. கைதான காதலன்..!
- 3 நாளா ஒரே இடத்தில் நின்ன கார்.. திடீரென வீச ஆரம்பித்த துர்நாற்றம்.. "கதவ திறந்து உள்ள பாத்தா".. அதிர்ச்சி சம்பவம்
- தொண்டையில் சிக்கிய உணவு.. துடிச்சுப்போன காவலர்.. உயிரை காப்பாற்றிய சப் இன்ஸ்பெக்டர்..
- ஒரு பைக்-ல இத்தனை பேரா..வைரலான வீடியோ.. போலீஸ் போட்ட பொளேர் கமெண்ட்..!