"அவரு Vibe ஆகுறது மட்டும் இல்லாம நம்மளையும் சேர்த்து Vibe ஆக்குறாரே".. பட்டையை கிளப்பும் காவலர்.. "சுத்தி நிக்குறவங்களே சொக்கி போய்ட்டாங்க"

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பொதுவாக நாம் ஒரு பணியை விரும்பி அன்பு கொண்டு செய்யும் போது, அதற்கு மத்தியில் என்ன நெருக்கடி வந்தாலும் அதனைக் கடந்து செல்ல கூடிய வழி நமக்கு உருவாகும்.

Advertising
>
Advertising

நமது தொழிலை நாம் எந்த அளவுக்கு விரும்பி செய்கிறோமோ, அந்த அளவுக்கு நமது வாழ்க்கை கூட சிறந்த வழியில் தான் பயணம் செய்யும்.

அப்படி தன்னுடைய பணியை விரும்பி செய்யும் காவலர் ஒருவரின் வீடியோ தான், இணையத்தில் அதிகம் வைரலாகி பலரையும் ஒரு Vibe'இற்குள் கொண்டு வந்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம், டெஹ்ராடுன் பகுதி அருகே உள்ள சாலையில், ஊர்க் காவல் படை வீரரான ஜோகேந்த்ர குமார் என்பவர் போக்குவரத்து காவலராக நியமிக்கப்பட்டிருந்தார். சாலையில் செல்லும் வாகனங்களுக்கு சிக்னல்கள் கட்டுவதை போக்குவரத்து காவலர் இயல்பாகவே நின்றபடி செய்யலாம். ஆனால், அதில் எப்படி ஜோகேந்த்ர குமார் வேறுபட்டு இருக்கிறார் என்பது தான் அவருக்கு Applause'ஐ அள்ளி கொடுத்துள்ளது.

வாகனங்களுக்கு வழி காட்டுவதை நடனத்துடன் இணைத்த படி, மிகவும் அசத்தலான ஸ்டெப்களுடன் அசைந்து அசைந்து செய்து காட்டுகிறார். இதனைக் காணும் வாகன ஓட்டிகளுக்கு கூட, ஒருவித புத்துணர்ச்சி மனதில் பிறக்க தான் செய்கிறது. மிகவும் அழகாக முகத்தில் ஒரு புன்னகையுடன் ஜோகேந்த்ர குமார் அப்பகுதியில் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் விஷயம், தற்போது இணையத்தில் பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

இது பற்றி பேசும் ஜோகேந்த்ர குமார், "நான் ஒரு தனித்துவமான விஷயத்தை கையில் எடுத்துள்ளேன். இது மக்களை மகிழ்விக்கிறது. போக்குவரத்து சிக்னல்களில் நிற்கும் போது, மக்கள் யாரும் சலிப்பு அடையாமல் இருக்க இதனை நான் செய்கிறேன். நான் எனது வேலையையும் ரசித்து செய்கிறேன்" என கூறி உள்ளார்.

இதற்கு முன்பாக, சென்னை, இந்தூர் உள்ளிட்ட இந்தியாவின் சில பகுதிகளை சேர்ந்த போக்குவரத்து போலீசார், இது போல நடனமாடி மக்களை புத்துணர்ச்சியுடன் சிக்னலில் இருந்து அனுப்பி வைக்கும் வீடியோக்கள் அதிகம் வைரலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

POLICE, VIBE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்