'எத்தன பேரு?'.. 'கான்கிரீட்' கலவை இயந்திர 'லாரியில்' சொந்த ஊருக்கு பயணித்த 18 பேர்!'.. 'சோதனையில்' அதிர்ந்துபோன 'காவல்துறை'!.. 'வீடியோ'!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மத்திய பிரதேசத்தில் சிமெண்ட் கலவை லாரியில் மறைந்து பயணித்த 18 புலம்பெயர்ந்த தொழிலாளர்களை போலீசார் தடுத்து நிறுத்தி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.‌ கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை அடுத்து, போக்குவரத்து தடை செய்யப்பட்டது அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.‌

இதனால் பால், காய்கறிகள் ஏற்றிச் செல்லும் வாகனங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பயணித்து வருகின்றனர்.  சட்டப்படி இது குற்றம் என்றாலும் கூட மனிதாபிமான அடிப்படையில் சில வாகன ஓட்டிகள் இவ்வாறு பயணிப்பவர்களுக்கு உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது சிமெண்ட் கலவை லாரி ஒன்றில் லாரிக்கு பின்னால் இருந்த பெரிய கலவை இயந்திரத்திற்குள் ஓட்டுநரின் உதவியுடன் 18 பேர் மறைந்து பயணித்து வந்துள்ளது தெரிய வந்ததை அடுத்து போலீசார் அதிர்ந்தனர்.‌

இதுபற்றி பேசிய காவல்துறையினர் வாகன சோதனையின்போது சிமெண்ட் கலவை இயந்திரத்துக்குள் பயணித்த இந்த 18 பேரும் உத்தரப்பிரதேசத்தின் லக்னோவைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் மகாராஷ்டிராவில் இருந்து லக்னோவிற்கு சென்று கொண்டிருந்தபோது பிடிபட்டுள்ளதாகவும்

அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்