'போன்-அ செக் பண்ணனும்னு போலீஸ் கேட்டா.. இந்த நம்பருக்கு மெசேஜ் பண்ணுங்க'..அதிரவிட்ட கமிஷ்னர்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பொது மக்களின் மொபைல் போன்களை போக்குவரத்து காவல்துறையினர் பரிசோதிக்க கூடாது எனவும் மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பெங்களூரு நகர கமிஷ்னர் கமல் பண்ட் அறிவித்து உள்ளார்.

Advertising
>
Advertising

"என்ன மண்ட ஒரு மார்க்கமா இருக்கு.. இங்க வாங்க".. ஏர்போர்ட் அதிகாரிகளை அதிரவிட்ட இளைஞர்..!

குற்றச்சாட்டு

பெங்களூரு நகரில் போக்குவரத்து காவல்துறையினர் மக்களின் மொபைல் போன்களை பரிசோதிப்பதாகவும் அப்போது போனின் அழைப்பு விபரங்களை காவல்துறையினர் பார்ப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், பெங்களூரு நகர கமிஷ்னர் கமல் பண்ட் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "உரிய அனுமதி பெறாமல், எந்த போலீஸ் அதிகாரியும் பொது மக்களின் மொபைல் போன்களை ஆய்வு செய்யக்கூடாது. இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாகக் காணப்பட்டால், அவற்றை என் கவனத்திற்குக் கொண்டு வாருங்கள்" என பண்ட் தெரிவித்திருக்கிறார்.

புகார்

மேலும் பெங்களூரு நகர கமிஷ்னர் கமல் பண்ட் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில்,"எந்த காரணத்தை கொண்டும் பொது மக்களின் மொபைல் போன்களை கையகப்படுத்துவதை பெங்களூரு காவல்துறை ஏற்காது. அத்தகைய செயலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இதுபோன்ற சம்பவத்தை நீங்கள் கண்டால், உடனடியாக சம்பவம் நடந்த இடம் பற்றிய விவரங்களையும், ஹொய்சாலா வாகனத்தின் உரிம எண்ணையும் வாகனத்தின் எண்ணையும் எங்களிடம் பகிர்ந்து அதை எங்கள் கவனத்திற்கு கொண்டு வரவும். அத்தகைய போலீசார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என குறிப்பிட்டுள்ளார். பொது மக்களின் தனி உரிமைக்கு எதிராக காவல்துறையினர் செயல்பட கூடாது எனவும் பண்ட் வலியுறுத்தி உள்ளார்.

பொதுமக்கள் இதுகுறித்து 112 அல்லது 08022942215 ஆகிய எங்களுக்கு போன் செய்தும் புகார் அளிக்கலாம் என பண்ட் அறிவித்து உள்ளார்.

ஹொய்சாலா வாகனங்கள்

பெங்களூருவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகளை தடுக்கவும், பெண்களை பாதுகாக்கவும் பிரத்யேக 'பிங்க் ஹொய்சாலா' ரோந்து வாகனங்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரில் வாகன பரிசோதனையில் ஈடுபடும் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள், பொதுமக்களின் மொபைல் போன்களை ஆய்வு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பெங்களூரு நகர கமிஷ்னர் கமல் பண்ட் வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து மக்கள் பரபரப்புடன் பேசிவருகின்றனர்.

பிள்ளையார் கோவில் தெரு, நியூயார்க், அமெரிக்கா... அட்ரஸ் உண்மைதான்.. பல வருடங்களுக்கு மேலாக தொடரும் பாரம்பரியம்..!

POLICE, BENGALURU POLICE COMMISSIONER, MOBILE PHONES, கமிஷ்னர், மொபைல் போன், போக்குவரத்து காவல்துறை

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்