என் காதலிய ரொம்ப மிஸ் பண்றேன்...! 'எப்படி நாங்க ரெண்டு பேரும் மீட் பண்றது...? 'போலீசாரிடம் கேட்ட இளைஞர்...' - போலீசார் கொடுத்த 'வேற லெவல்' பதில்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்து வருகிறது. அதிலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் சூழல் கவலைக்குரியதாக உள்ளது. இதனால் மும்பை உட்பட சில நகரங்களில் எந்தவித தளர்வும் இல்லாத தீவிரமாக கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படுகிறது..

மாவட்டங்கள் மற்றும் நகரங்களுக்கு இடையிலான பயணம் மேற்கொள்பவர்களிடம் அபாராத தொகை வசூலிக்கப்படுகிறது. அதோடு மட்டுநில்லாமல் 14 நாட்கள் தனிமைப் படுத்திக் கொள்ளவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் சிலரது தேவையை கருதி பயணத்திற்கு மாநில அரசு சம்மதம் சொல்லி உள்ளதாக தெரிகிறது. அப்படி பயணம் செய்ய காவலர்களிடம் அனுமதி பெற்ற ஸ்டிக்கர் கையில் வைத்திருக்க வேண்டும் என கட்டுப்பாடு அங்கு நடைமுறையில் உள்ளது.

இப்படி இருக்கும் சூழலில் “வெளியே சென்று என் காதலியை சந்திக்க நான் என்ன ஸ்டிக்கர் பயன்படுத்த வேண்டும்? நான் அவரை மிஸ் செய்கிறேன்” என ட்வீட் செய்து அதில் போலீசாரை டேக் செய்துள்ளார்.

இந்த கிண்டல் கேள்வியை கவனித்த போலீசார் அந்த இளைஞருக்கு பதில் அளித்தனர். அதில், “இது உங்களுக்கு ரொம்ப முக்கியமான தேவை என புரியுது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக உங்களது தேவை எங்களின் அவசர தேவை பட்டியலின் கீழ் இல்லையே.

இந்த தூரமும், பிரிவும் உங்களுக்குள் இதயங்களை மேலும் நெருக்கத்தைக் கொண்டு வரும்

PS : நீங்கள் இரண்டு பேரும் வாழ்நாள் முழுவதும் இணைந்திருக்க எங்களது வாழ்த்துகள். இந்த பிரிவு கொஞ்சம் நாளைக்கு தான்” என மும்பை போலீசார் அந்த இளைஞருக்கு பதில் கொடுத்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்