பிரேக் அப் பண்ணும் அளவுக்கு வயதான கப்பிள்ஸ் இடையே வந்த சண்டை.. போலீஸாரின் செயலால் அடுத்த நொடி நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்திர பிரதேச மாநிலத்தில் குடும்பத்துக்குள் ஏற்பட்ட சண்டை காரணமாக போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த வயதான தம்பதிக்கு அங்கிருந்த அதிகாரிகள் அறிவுரை வழங்கியிருக்கிறார்கள்.
சண்டை
உத்திர பிரதேச மாநிலம் கொண்டா நகரத்தை அடுத்த காட்ராபஸார் பகுதியை சேர்ந்த வயதான தம்பதியிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி சண்டை எழுந்ததாக கூறுகிறார்கள் அருகில் வசிப்பவர்கள். இந்நிலையில் நேற்று, 75 வயதான தம்பதி இடையே ஏற்பட்ட வாக்குவாதம் சண்டையாக மாறியிருக்கிறது.
போலீஸ் ஸ்டேஷன்
இதனை அடுத்து அருகில் உள்ள கொண்டா நகர காவல் நிலையத்திற்கு சென்றிருக்கிறார்கள் இருவரும். அங்கிருந்த காவல்துறை அதிகாரிகள் என்ன புகார் எனக் கேட்க, தம்பதி நடந்தவற்றை கூறியிருக்கிறார்கள். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் இருவரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கினர். இனிமேல், சண்டை போடக்கூடாது என அறிவுரை வழங்கிய காவல்துறை அதிகாரிகள் இனிப்பு வாங்கிவந்து ஒருவருக்கொருவர் ஊட்டிக்கொள்ளுமாறு சொல்லியிருக்கிறார்கள்.
இனிப்பு
அதன்படி, தாத்தா இனிப்பு எடுத்து பாட்டிக்கு ஊட்டிவிட, பாட்டியும் அவ்வாறே செய்திருக்கிறார். இந்த சம்பவத்தை அதிகாரி ஒருவர் வீடியோவாக எடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட அது தற்போது வைரலாக பரவிவருகிறது.
அந்த டிவிட்டர் பதிவில்," தங்களுக்குள் ஏற்பட்ட சண்டையின் காரணமாக காவல் நிலையத்திற்கு 75 வயதான தம்பதி ஒன்று வந்தனர். கொண்டா காவல் நிலையத்தின் எஸ்பி சந்தோஷ் அவர்களின் ஆலோசனைப்படி இருவருக்கும் சமாதானம் செய்துவைக்கப்பட்டது. மனிதநேயத்தின் அடிப்படையில் இந்த முயற்சி எடுக்கப்பட்டது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், வயதான தம்பதியை சமாதானப்படுத்தி ஒன்றுசேர்த்த காவல்துறை அதிகாரிகளை மக்கள் பாராட்டிவருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- வீட்டுக்குள் கேட்ட பயங்கர சத்தம்... சென்னையில் நடந்த Money heist.. ரைடு விட்ட சென்னை போலீஸ்..!
- வீட்டுக்குள்ள பேய் வந்திடுச்சு.. வெளியுலகத்துக்கே வராம வீட்டுக்குள்ளேயே முடங்கிய இளம்பெண்.. மீட்க போன போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
- தொட்டால் ஷாக்.. லட்சத்துல வாங்கி கோடில விற்கலாம்.. கூட்டாளிகளின் நூதன உருட்டால் அதிர்ந்துபோன நபர்..!
- “போன் தொலைஞ்சா இத மட்டும் உடனே பண்ணுங்க”.. எஸ்பி கொடுத்த சூப்பர் தகவல்..!
- சந்தேகப்பட்ட காதல் கணவன்.. கடுப்பில் மனைவி செஞ்ச பகீர் காரியம்.. பொள்ளாச்சியில் பரபரப்பு..!
- 'போன்-அ செக் பண்ணனும்னு போலீஸ் கேட்டா.. இந்த நம்பருக்கு மெசேஜ் பண்ணுங்க'..அதிரவிட்ட கமிஷ்னர்..!
- 'பாலை ஊத்துனா பச்சை கலர்ல மாறிடும்.. பவர்ஃபுல் நவபாஷண சிலை'.. புதுசாக உருட்டியவருக்கு போலீஸ் வலைவீச்சு..!
- 'ரொம்ப நேரமா ஆளைக்காணோம்'.. முதலாளிக்கு பதட்டத்துடன் பேசிய பணியாளர்.. டிவிஸ்ட்டை உடைத்த சிசிடிவி..!
- "கருப்பு நிற தாளை கழுவினால் நல்ல ரூபாய் நோட்டு".. வித்தியாசமாக உருட்டிய கும்பல்.. போலீஸ் போட்ட ஸ்கெட்ச்..!
- படிச்சது லேப் டெக்னீசியன்.. பார்த்தது மருத்துவர் வேலை.. தொக்காக தூக்கிய போலீஸ்..!