VIDEO: அய்யோ..! ரெண்டு துண்டாக உடைந்த கோயில் தூண்.. தெறித்து ஓடிய மக்கள்.. அதிர்ச்சி வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஒரே கல்லால் ஆன கொடி மரத்தை அகற்றியபோது இரண்டு துண்டாக உடைந்து விழுந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பண்டிதிவாரி பாலம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள பழமையான ராமர் கோவில் முன்பு, 40 டன் எடையுள்ள 44 அடி உயரம் கொண்ட ஒரே கல்லால் ஆன கொடி மரம் ஒன்று இருந்தது.

கடந்த 1963-ம் ஆண்டு இந்த கொடிமரம் அமைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 59 ஆண்டுகள் ஆன நிலையில், அந்த கொடி மரம் பழசாகியிருந்தது. இதனை அடுத்து புதிதாக கொடி மரம் வைப்பதற்காக அந்த பழைய கொடி மரம் வேறு இடத்திற்கு மாற்ற முடிவெடுத்தனர். இதனால் ராட்சத கிரேன் உதவியுடன் கொடிமரத்தை மாற்றும் முயற்சி நடைபெற்றது. இதைப் பார்க்க ஏராளமான மக்கள் குவிந்தனர்.

இந்த நிலையில், பழைய கொடி மரத்தை தூக்கியபோது திடீரென்று கொடி மரத்தின் மேல் பகுதி உடைந்து கீழே விழுந்தது. கொடிமரம் இடிந்து விழுந்தபோது, அதை சுற்றி நின்ற மக்கள் பலர் நின்றிருந்தனர். சுதாரித்துக் கொண்ட அவர்கள் அங்கிருந்து தப்பித்து ஓடினர். அதனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படாமல் உயிர் தப்பினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ANDHRA PRADESH, POLE COLLAPSE, DWAJASTHAMBHAM

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்