'ஹார்ட் ஆபரேஷன் பண்ணணும்'...'பேங்க்'ல இருந்து பணத்தை எடுக்க முடியல'...முதியவருக்கு நேர்ந்த துயரம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாமருத்துவ செலவுக்காக டெபாசிட் செய்திருந்த ரூ.80 லட்சம் பணத்தை எடுக்க முடியமால், முதியவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முரளிதர் என்ற 83 வயது முதியவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு இதயத்தில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பை சரி செய்ய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறினார்கள். இதையடுத்து பிஎம்சி வங்கியில் முதியவர் டெபாசிட் செய்திருந்த ரூ.80 லட்சம் பணத்தை எடுக்க முயற்சி செய்தார்கள். ஆனால் ரிசர்வ் வங்கியின் கட்டுபாடுகள் காரணமாக அவரது மருத்துவ செலவுகளுக்காக அந்த பணத்தை, முதியவர்களின் உறவினர்களால் எடுக்க முடியவில்லை.
இதையடுத்து அறுவை சிகிச்சை செய்யாத காரணத்தால் அந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பி.எம்.சி வங்கியில் பணத்தை டெபாசிட் செய்துள்ளவர்கள் உயிரிழந்துள்ளது இது நான்காவது நிகழ்வாகும். முன்னதாக, பிஎம்சி வாடிக்கையாளர்கள் மாரடைப்பு காரணமாக இரண்டு பேர் உயிரிழந்துவிட்டனர். மேலும் ஒரு பெண் மருத்துவர் தற்கொலை செய்து கொண்டார்.
இதனிடையே டெபாசிட் செய்த தொகையில் ரூ.1000 மட்டுமே எடுக்க முடியும் என்று ஆர்பிஐ கடும் கட்டுபாடுகள் விதித்திருந்த நிலையில், பின்னர் அதனை ரூ.40,000-ஆக உயர்த்தி 3 முறையாக அதனை பிரித்து எடுத்துக்கொள்ளலாம் என மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்தது. முன்னதாக, மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பஞ்சாப்-மகாராஷ்டிர கூட்டுறவு வங்கியிடம் வீட்டு வசதி மற்றும் உள்கட்டமைப்பு லிமிடெட் நிறுவனம் (ஹெச்டிஐஎல்) ரூ.4,355 கோடி அளவுக்கு கடன் வாங்கியது. ஆனால், அதனைத் திருப்பிச் செலுத்தவில்லை. அந்த நிறுவனத்துக்கு உடந்தையாக இருந்த வங்கி அதிகாரிகள், கடன் விவரத்தை ரிசர்வ் வங்கியிடமிருந்து மறைத்து விட்டனர்.
இதனைத்தொடர்ந்து ரிசர்வ் வங்கியின் தொடர் கண்காணிப்பை அடுத்து இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. இதன்விளைவாக கடந்த செப்.23ம் தேதி முதல் பிஎம்சி வங்கியில் பணத்தை எடுக்க வாடிக்கையாளர்களுக்கு கடும் கட்டுபாடுகளை விதித்தது ஆர்பிஐ. இதனால் மும்பை நீதிமன்றம் முன்பாக, பிஎம்சி வங்கியில் டெபாசிட் செய்திருந்த வாடிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுனர். இந்த போராட்டத்தில் பங்கேற்று திரும்பிய சஞ்சய் குலாத் என்பவர் அன்று இரவே மாரடைப்பால் மரணமடைந்தார்.
இதற்கிடையே பிஎம்சி வங்கியில் டெபாசிட் செய்து அதனை எடுக்க முடியமால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது தான், சோகத்தின் உச்சம்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- '73 கோடி' ரூபா 'தண்ணிய' திருடிட்டாங்க..போலீஸ் 'கேஸ்' கொடுத்த மனிதர்!
- 'பானி பூரி வித்து'... 'பசியில் உறங்கி தவித்த இளம் வீரர்'... 'உலக சாதனை படைத்து அசத்தல்'... நெகிழ்ச்சியான சம்பவம்!
- 'கல்யாணம் பண்ணலாம்'...'ஆனா உன்மேல சந்தேகமாக இருக்கு'... இளைஞர் செய்த கொடூரம்!
- ‘ரயிலில் அடிபட்டு உயிரிழந்த பிச்சைக்காரர்’.. ‘வங்கிக் கணக்கைப் பார்த்து’.. ‘அதிர்ந்துபோய் நின்ற போலீஸார்’..
- ‘சாலையோரத்தில்’... ‘உணவு விற்கும் எம்பிஏ இளம் தம்பதி'... 'மனதை உருக வைக்கும் காரணம்’... வைரலான பதிவு!
- 'எடம்'லாம் தர முடியாது..தலைக்கேறிய ஆத்திரம்..விரலைக் கடித்து துப்பிய நபர்!
- 'என் தங்கச்சி கிட்டயா இப்படி பண்ற?'.. 'போலீஸ்காரர் மகளுக்கு'.. 'அக்காள் கொடுத்த நூதன யோசனை!'
- 'முதலில் எல்லார் முன்னாடியும் என்ன'.. 'இப்ப என் அம்மாவ'.. டீச்சரின் மேல் உள்ள ஆத்திரத்தில் 4-ஆம் வகுப்பு மாணவன் செய்த செயல்!
- டியூசன் டீச்சரை கத்தியால் குத்தி கொலை செய்த 7 ம் வகுப்பு மாணவன்..! மிரள வைத்த காரணம்..!
- '7வது மாடியில் இருந்து'.. தூக்கி வீசிய 'தந்தையின் நண்பர்'.. '3 வயது பெண் குழந்தைக்கு' நடந்த 'கொடூரம்'!