பயணத்துக்கு நடுவே திடீர்னு காரை நிறுத்தச்சொன்ன பிரதமர் மோடி.. சாலையோரம் நின்ற பெண் கொடுத்த சர்ப்ரைஸ் பரிசு.. வைரல் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பயணத்துக்கு நடுவே பிரதமர் மோடி காரை நிறுத்திவிட்டு தனக்காக காத்திருந்த பெண்ணிடம் இருந்து பரிசை பெற்றுக்கொண்ட வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | உலக புகழ்பெற்ற மோனலிசா ஓவியத்தை உடைக்க பாய்ந்த பாட்டி.. பாதியிலேயே பறந்த விக்.. கோவத்துல செஞ்ச காரியத்தால் அதிர்ந்துப்போன அதிகாரிகள்..வைரல் வீடியோ.!

8 வருடம்

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதையொட்டி, நேற்று முதல் வரும் 14-ம் தேதி வரை நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு இந்தியா முழுவதும் பாஜக ஏற்பாடு செய்துள்ளது. இதனை தொடர்ந்து இமாச்சல பிரதேசத்திற்கு பிரதமர் மோடி சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN) திட்டத்தின் மூலம் 10 கோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் 21,000 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளதாக அங்கே நடைபெற்ற நிகழ்ச்சியில் மோடி அறிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மோடி,"கடந்த 8 ஆண்டுகளில் நான் என்னை ஒரு முறைகூட பிரதமராக நினைத்ததில்லை. கோப்புகளில் கையெழுத்திடும்போது மட்டும் தான் பிரதமர் என்ற பொறுப்பு எனக்கு உள்ளது. ஆனால், கோப்புகள் சென்ற உடன் நான் பிரதமராக கிடையாது. எனது வாழ்க்கையின் எல்லாமான 130 கோடி மக்களின் முதன்மை சேவகன் நான். எனது வாழ்க்கை உங்களுக்கு தான். இந்தியா எந்த நாட்டின் முன்பும் தலை குனிந்து நிற்க தேவையில்லை. உலக நாடுகளிடம் இந்தியா மீதான பார்வை மாறியுள்ளது. நாம் அனைவரும் சேர்ந்து இந்தியாவை உயரிய நிலைக்கு கொண்டு செல்வோம் என்று உறுதி ஏற்போம்" எனப் பேசினார்.

ஓவியம்

இந்நிலையில், இமாச்சல் பிரதேச பயணத்தின் போது, ஷிம்லாவில் காரில் சென்றுகொண்டிருந்த மோடி, திடீரென காரை நிறுத்தி கீழே இறங்கிச் சென்று பெண் ஒருவர் அளித்த பரிசை பெற்றுக்கொண்டார். ஷிம்லாவை சேர்ந்த அனு என்ற அந்தப் பெண் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபாய் மோடியின் ஓவியத்தை வரைந்து பரிசாக அளித்திருக்கிறார்.

அதனை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட மோடி,"உங்களுடைய பெயர் என்ன?நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள்? இதை வரைய எவ்வளவு நேரம் ஆனது?" எனக் கேட்டார். இதற்கு பதிலளித்த அனு தான் ஷிம்லாவை சேர்ந்தவர் என்றும் ஒரு நாளுக்குள் இந்த ஓவியத்தை வரைந்து முடித்ததாகவும் கூறினார். மேலும், மோடியின் புகைப்படத்தையும் தான் வரைந்திருப்பதாகவும் அதனை கமிஷனர் மூலமாக அனுப்ப இருப்பதாகவும் அனு தெரிவித்தார். இதனிடையே மோடியின் கால்களில் விழுந்து அனு வாழ்த்துப்பெற்றார்.

பிரதமர் மோடியினுடைய தாயாரை ஓவியமாக வரைந்து பெண் ஒருவர் பிரதமருக்கு பரிசளித்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

 

Also Read | தமிழகத்தில் இன்றுமுதல் தென்மேற்கு பருவமழை துவக்கம்.. எந்தெந்த மாவட்டங்களில் மழை அதிகம் பெய்யும்? வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை..!

 

PM MODI, PORTRAIT, PM STOPS CAR, SHIMLA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்