பிரபல தமிழ் எழுத்தாளர் பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி தமிழிலேயே போட்ட நெகிழ்ச்சியான ட்வீட்.. முழு விபரம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மறைந்த தமிழ் எழுத்தாளர் அழ. வள்ளியப்பாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வணக்கம் செலுத்துவதாக ட்வீட் செய்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | 600 அடி ஆழ சுரங்கத்துல சிக்கிய 2 பேர்.. 9 நாளா உயிரை காப்பாத்திக்க செஞ்ச விஷயம்.. உள்ளே போன மீட்புப் வீரர்களே மிரண்டு போய்ட்டாங்க..!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ராயவரத்தில் கடந்த 1922 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி பிறந்தவர் அழ.வள்ளியப்பா. வங்கி ஊழியராக பணியாற்றிய அழ.வள்ளியப்பா பல்வேறு இதழ்களின் கௌரவ ஆசிரியராகவும் இருந்திருக்கிறார். தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறுவர்களுக்கான படைப்பு பற்றிய சரித்திரத்தை அழ. வள்ளியப்பாவின் பெயர் இல்லாமல் எழுதிவிட முடியாது. குழந்தை எழுத்தாளர்களை திரட்டி, சிறுவர்களுக்கான எளிமையான மற்றும் கருத்து செறிவு உடைய நூல்கள் வெளிவர காரணமாகவும் திகழ்ந்தார்.

அழ. வள்ளியப்பா 2,000 க்கும் மேலான குழந்தைகளுக்கான பாடல்கள் எழுதியுள்ளார். இதனாலேயே இவருக்கு தமிழ்நாட்டு அரசினரின் குழந்தை இலக்கிய வளர்ச்சி - ஆராய்ச்சிக் குழுவில் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. பாடல்கள் மட்டுமல்லாது புதினங்கள், கட்டுரைகள் மற்றும் மொழிபெயரப்பு ஆகியவற்றிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்த அழ. வள்ளியப்பா கடந்த 1989 ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் தேதி காலமானார்.

இதனிடையே இன்று (நவம்பர் 7) அவருடைய பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் அழ.வள்ளியப்பாவிற்கு வணக்கம் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். அவரது ட்வீட்டில்,"திரு அழ. வள்ளிப்பாவிற்கு  அவரது பிறந்தநாளில் வணக்கங்களை செலுத்துகிறேன். அவர் மிகச் சிறந்த எழுத்துவன்மை மற்றும் கவிப்புலமை பெற்றிருந்தார். மேலும் குழந்தைகளிடையே வரலாறு, பண்பாடு மற்றும் இலக்கியம் ஆகியவற்றை பிரபலப்படுத்தியதற்காகவும் போற்றப்படுகிறார். அவரது படைப்புகள் இன்றளவிலும் பலரை ஊக்கப்படுத்தி வருகின்றன" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

இந்நிலையில், தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை பிரதமருக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் பகிர்ந்துள்ள ட்விட்டர் செய்தியில்,"தமிழ் குழந்தைகளின் இலக்கிய உலகின் பேராசான் திரு அழ. வள்ளியப்பா அவர்களின் நூற்றாண்டில் அவரது நினைவை போற்றிய நமது பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். தமிழ் குழந்தைகளுக்கு தேசியத்தையும் தெய்வீகத்தையும் அகிம்சையும் பாடல்களாக வழங்கிய திரு அழ. வள்ளியப்பா அவர்களின் படைப்புகளை மேலும் பாரதம் எங்கும் கொண்டு சேர்ப்போம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read | ஓ இதுனால தான் அவரு 360 டிகிரி பிளேயரா.. ஷாட் ஒவ்வொண்ணும் பயங்கரமா இருக்கே.. ஜிம்பாப்வே கிட்ட பொங்கிய சூர்யா குமார் யாதவ்..!

NARENDRAMODI, PM NARENDRA MODI TWEET, AZHA VALLIAPPA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்