பிரதமரின் பாதுகாப்பிற்காக '12 கோடியில்' அதிநவீன கார்...! - இந்த காரில் 'இவ்வளவு' விஷயங்கள் இருக்கா...?
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பிற்காக வாங்கப்பட்ட சுமார் 12 கோடி ரூபாய் மதிப்புள்ள அதிநவீன காரை குறித்து இணையத்தில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
திரு.நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக பதவிவகித்த போது குண்டு துளைக்காத மஹிந்திரா ஸ்கார்பியோ காரைப் பயன்படுத்தி வந்தார். அதன் பின் 2014ல் பிரதமராகப் பொறுப்பேற்றதும், உச்சபட்ச பாதுகாப்பு காரணமாக, பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் ஹை-செக்யூரிட்டி கார் தேர்ந்தெடுக்கப்பட்டது.
அதோடு, 2019ல் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் சென்டினல், டொயோட்டா லேண்ட் க்ரூஸர் ஆகிய கார்கள் பிரதமரின் பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு அதிநவீன Mercedes-Maybach S 650 Guard கார் வாங்கபட்டுள்ளது.
பொதுவாக பிரதமருக்கு எந்த வகையான பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட காரைப் பயன்படுத்த வேண்டும் என்பதை, அவரது பாதுகாப்பு அதிகாரிகள்தான் முடிவு செய்வார்கள். அதோடு, அதிக பாதுகாப்பு கொண்ட காரைப் பயன்படுத்தும் படி பாதுகாப்பு அதிகாரிகள் பிரதமரைக் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதினுடனான சந்திப்பின்போது, இந்தக் காரில் தான் பிரதமர் ஹைதராபாத் இல்லத்திற்கு வந்திருந்தார். இப்போது இணையத்தில் பிரதமர் மோடியின் கார் குறித்து தான் பலர் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
பிரதமரின் Mercedes-Maybach S 650 Guard கார், ஏகே 47 ரக துப்பாக்கித் தோட்டாக்கள்கூட துளைக்காத அளவிற்கு பாதுகாப்பு உறுதி கொண்டதாக இருக்குமாம். அதோடு 2 மீட்டர் தூரத்தில் 15 கிலோ அளவிற்கு வெடி மருந்து வெடித்தாலும் உள்ளே இருப்பவர்களுக்கு எந்தச் சேதமும் ஏற்படாத வண்ணம் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.
இந்த காரில் விஷவாயு தாக்குதல் நடத்தப்பட்டாலும் காரில் இருப்பவர்களுக்கு தனியாக காற்று விநியோகம் கிடைக்கும். அதிகபட்சமாக மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்த காரின் டயர்கள் சேதமடைந்தாலோ பஞ்சர் ஆனாலோ காற்று இறங்காத வண்ணம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் 2021ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் இதேபோன்ற கார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பயணம் செய்ய வாங்கப்பட்ட நிலையில், தற்போது பிரதமருக்கும் வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஒமைக்ரான் அச்சுறுத்தல்.. 60 வயதானவர்களுக்கு பூஸ்டர் டோஸ்.. மோடி வெளியிட்ட 3 முக்கிய அறிவிப்புகள்!
- 18 வயசுல 'பிரதமரையே' தேர்ந்தெடுக்கலாம்...! வாழ்க்கை துணையை தேர்தெடுக்க முடியாதா...? 'ரொம்ப தப்புங்க...' - ஓவைசி காட்டம்...!
- பிரதமர் மோடி யாருன்னு தெரிஞ்சுக்க. இந்த ஒரு வீடியோ போதுமே.. நெகிழும் நெட்டிசன்கள்
- 'பிரதமரின் போயிங் 777-337 விமானம்'... 'பாகிஸ்தான் வான்வெளியில் சென்றதா'?... 'விமானத்திற்குள் நடந்த சுவாரசியம்'... பின்னணி தகவல்கள்!
- 'மோடி'யின் வாழ்த்துக்கு நன்றி சொன்ன 'ஸ்டாலின்'.. தன்னுடைய 'ட்விட்டர்' பதிவில் ஸ்டாலின் குறிப்பிட்டது என்ன??..
- "நாட்டின் வளர்ச்சிக்காக ஒன்றிணைந்து செயல்படுவோம்.." ஸ்டாலினுக்கு 'வாழ்த்து' சொல்லி.. பிரதமர் 'மோடி' போட்ட 'ட்வீட்'!!
- Video : "இந்திய பிரதமர் மோடிக்கு ரொம்ப பெரிய நன்றி..." நெகிழ்ச்சியுடன் பேசிய 'வெஸ்ட் இண்டீஸ்' கிரிக்கெட் 'வீரர்'!!
- “ஃபீலிங்ஸ புரிஞ்சுக்கங்க.. இது படம் இல்ல.. எங்க எமோஷன்!”.. KGF ரசிகர்கள் பிரதமருக்கு எழுதிய வைரல் கடிதம்!
- 'இது விவாதம் இல்ல.. நாட்டின் இப்போதைய தேவையே இதுதான்!'.. தேர்தல் தொடர்பாக பிரதமர் மோடியின் புதிய ‘கொள்கை!’
- VIDEO: '4 வயது குழந்தையின் அட்டகாசமான காரியம்'... 'வியந்துப் போன பிரதமர்'... ‘அப்படி என்ன செஞ்சாங்க!’