பிரதமர் மோடி யாருன்னு தெரிஞ்சுக்க. இந்த ஒரு வீடியோ போதுமே.. நெகிழும் நெட்டிசன்கள்

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

டெல்லி: வாரணாசியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி    தொழிலாளர்களுடன் அமர வந்த போது, நாற்காலி கொடுக்கப்பட்டது. அதை வேண்டாம் என்று பிரதமர் மோடி மறுத்ததுடன், தொழிலாளர்களுடன் சேர்ந்து அமர்ந்து கொண்டு, தன்னுடன் பக்கத்தில் உட்காருமாறு அவர்களை கேட்டுக்கொண்டு உட்கார வைத்தார்,. இந்த  வீடியோ வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் பல கோடி ரூபாய் செலவில் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டது. இதை பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வின் போது தனக்காக கொடுக்கப்ட்ட நாற்காலியில் அமராமல், கட்டுமான பணிகளில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி அமர்ந்தார்.  தன்னிடம் கொடுக்கப்பட்ட பிளாஸ்டிக்  நாற்காலியை தூக்கி கொடுத்துவிட்டார்.

என்ன நடந்தது

பிரதமர் நரேந்திர மோடி  எம்பியாக தேர்வு செய்யப்பட்ட  தொகுதி  உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் வாரணாசியாகும். அங்கு கடந்த 13 ஆம் தேதி 2 நாட்கள் பயணமாக சென்றார். அங்கு அப்போது ரூ 339 கோடி மதிப்பில் காடி விஸ்வநாதர் கோயில் வளாகத்தில் சில திட்டங்களை மக்களுக்கு பிரதமர் மோடி அர்ப்பணித்தார். 

தீபாராதனை

காசி விஸ்வநாதர் ஆலய வளாகத்தை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி அங்கு தீபாராதனை செய்து வழிபாட்டிலும் ஈடுபட்டார். பின்னர்  மாலை கங்கை நதியில் புனித நீராடி அங்கு நடைபெற்ற ஆரத்தி நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்றார்.

தரையில் அமர்ந்த மோடி

 

ஆலய கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஒன்றாக அமர்ந்து உணவு அருந்தினார்.  ஆலய கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களுடன் உரையாடுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி அமர்வதற்காக நாற்காலி வசதி கொடுக்கப்பட்டது. ஆனால் நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு வந்த போது பாதுகாப்பு பணியிலிருந்த ஒருவர் நாற்காலியை எடுத்து பிரதமருக்கா போட்ட போது அந்த நாற்காலியில் அமர மறுத்து  அதே பாதுகாப்பு படை அதிகாரியிடம் நாற்காலியை திருப்பிக் கொடுத்தார்.  கட்டட பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் அவர்களுள் ஒருவராக தரையில் அமர்ந்தார். அவருடன் தொழிலாளர்களையும் நெருக்கமாக அமருமாறு பணித்தார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பல்வேறு மத்திய அமைச்சர்கள் பகிர்ந்து நெகிழ்ச்சி தெரிவித்து வருகிறார்கள். பாஜகவினர் பலரும் வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள்.

NARENDRA MODI, VARANASI, நரேந்திர மோடி, வாரணாசி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்