பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி காலமானார்.. பிரதமரின் உருக்கமான ட்வீட்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் உடல்நல குறைவால் மரணமடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருடைய மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertising
>
Advertising

பிரதமரின் தாயார் ஹீராபென் மோடி உடல்நலக்குறைவால் அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 99 ஆகும்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,"ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு வாழ்க்கை கடவுளின் காலடியில் தஞ்சமடைந்திருக்கிறது. துறவியின் பயணத்தையும், தன்னலமற்ற கர்மயோகியின் அடையாளத்தையும், மதிப்பு வாழ்க்கைக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தலையும் எனது அம்மா மூலமாக கண்டுகொண்டேன். அவருடைய 100வது பிறந்தநாளில் அவரைச் சந்தித்தபோது, ​​அவர் ஒரு விஷயம் சொன்னார். அது எப்போதும் என் நினைவுக்கு வரும். புத்திசாலித்தனத்துடன் வேலை செய்யுங்கள், தூய்மையுடன் வாழுங்கள் அவர் கூறினார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் பிரதமர் மோடியின் தயார் மறைவுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

MODI, HIRABEN, PM

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்