'பிரதமரின் போயிங் 777-337 விமானம்'... 'பாகிஸ்தான் வான்வெளியில் சென்றதா'?... 'விமானத்திற்குள் நடந்த சுவாரசியம்'... பின்னணி தகவல்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வான்வெளியாகச் சென்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடி 3 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றடைந்துள்ளார். வாஷிங்டனில் இன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் இருவரையும் சந்தித்து பிரதமர் மோடி பேச உள்ளார். ஜோ பைடன் அதிபராகப் பதவி ஏற்ற பிறகு பிரதமர் மோடி முதல் முறையாக ஜோ பைடனை சந்தித்துப் பேச இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

பின்னர் குவாட் மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, ஆஸ்திரேலியா, ஜப்பான் பிரதமர்களைச் சந்தித்துப்பேச உள்ளார். இதற்காகப் பிரதமர் மோடி பயணித்த போயிங்777-337 விமானம் டெல்லியிலிருந்து புறப்பட்டுச் சென்றது. இந்நிலையில் பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வான்வெளியாக அமெரிக்கா செல்வதற்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் அரசு சார்பில் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

அதே நேரத்தில் பிரதமரின் விமானம் 11.40 மணி அளவில் பாகிஸ்தான் வான்வெளியைக் கடந்ததாக விமானங்களைக் கண்காணிக்கும் பிளைட்ராடார் 24 எனும் இணையதளம் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி பாகிஸ்தான் வான்வெளியாகச் செல்வதற்கு விமானம் புறப்பட்ட பின்புதான் பாகிஸ்தான் அதிகாரிகள் அனுமதியளித்தனர். ஒருவேளை பிரதமர் மோடியின் விமானத்துக்கு பாகிஸ்தான் அனுமதி அளிக்காமல் இருந்திருந்தால், பிரதமர் மோடி பிராங்பர்ட் சென்று அங்கிருந்து அமெரிக்கா சென்றிருப்பார்.

இதற்கிடையே அமெரிக்காவிற்கு நீண்ட பயணம் என்பதால் பல்வேறு முக்கியக் கோப்புகள், அலுவலகப் பணிகளை விமானப் பயணத்திலேயே பிரதமர் மோடி கவனித்த சுவாரசிய நிகழ்வும் நடந்துள்ளது. முன்னதாக கடந்த 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி, சவுதி அரேபியா செல்வதற்குப் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்