மே 3க்குப் பிறகு என்ன செய்யலாம்?.. ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? நீக்கப்படுமா?.. பிரதமருடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் வெளியான 'முக்கிய' தகவல்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் என்று பிரதமரிடம் மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தல் தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் மாநில முதலமைச்சர்களுடன் 4வது முறையாக இன்று ஆலோசனை நடத்தினார்.
இதில் அமலில் உள்ள ஊரடங்கு மே 3ஆம் தேதிக்கு பிறகு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ஊரடங்கு நீட்டிப்பு பற்றி மே 3-க்கு பிறகே முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிகிறது. ஆலோசனையில் அதிகம் பாதித்த மாவட்டங்களில் ஊரடங்கு தொடரலாம் எனவும், கொரோனா பாதிப்பு இல்லாத இடங்களில் ஊரடங்கு தளர்த்தப்படலாம் என்றும் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள பொது முடக்கத்தை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் கோரிக்கை வைத்துள்ளார். மேலும், மே 3-ந் தேதிக்கு பிறகும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் மேகாலயா முதல்வர் கன்ராட் சங்மா கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனாவின் தாக்கம் குறையாததால் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று பிரதமரிடம் பீகார், அரியானா உள்ளிட்ட சில மாநில அரசுகளும் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
PC: ANI
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'படிப்படியாக குறையும் கொரோனா பாதிப்பு’... ‘கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில்’.. 'மத்திய அமைச்சர் தகவல்’!
- 'இவ்வளவு நாளா இது தெரியாமலேயே...' 'சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்...' நாமெல்லாம் 'பரம்பரையாக' பாதுகாக்கப்பட்டவர்கள்... 'விஞ்ஞானி கணிப்பு...'
- 'துளிர்த்த நம்பிக்கை'... 'முதல் முறையா நிம்மதி பெருமூச்சு'... உலகத்துக்கே நல்ல செய்தி சொன்ன அமெரிக்கா!
- லாக்டவுனில் சொந்தஊருக்கு ‘தனியாக’ நடந்து சென்ற பெண்.. ‘பள்ளிக்கூடத்தில்’ தங்க வைத்த போலீசார்.. கடைசியில் நடந்த கொடுமை..!
- 'ஸ்டாப் கம்யூனிஸ்ட் சீனா' கையெழுத்து இயக்கம்... 'சில மணி' நேரத்தில் 'கையெழுத்திட்டவர்களின்...' 'மலைக்க வைக்கும் எண்ணிக்கை...' 'அடுத்து அமெரிக்க ஆதரிக்க போகும் நாடு...'
- "இது என்ன தோட்டா தரணி போட்ட செட்டா?..." 'பூக்கள் நிறைந்து ரம்மியமாகக் காட்சியளிக்கும் சென்னை...' 'கொரோனா கொடுத்த கிஃப்ட்...' 'சென்னையை சும்மா விட்டாலே அழகுதான்...'
- பிறந்து ‘27 நாள்களே’ ஆன குழந்தைக்கு கொரோனா.. ஆனா எந்த சிகிச்சையும் கொடுக்காமல் குணமடைந்த ‘ஆச்சரியம்’.. எப்படி தெரியுமா?
- ‘மறுபடியும் மொதல்ல இருந்தா’!.. 8 பேரால் சீனாவுக்கு வந்த அடுத்த ‘சோதனை’.. அதிர்ச்சியில் மக்கள்..!
- 'கொரோனா வைரஸின் புரத கட்டமைப்பை...' 'புதிய இசை வடிவமாக மாற்றிய விஞ்ஞானிகள்...!' 'எதிரான இசைக்குறிப்பை உருவாக்க முயற்சி...'
- கொரோனாவை விட 'இதுதான்' இப்போ ரொம்ப முக்கியம்... அமெரிக்காவுக்கு 'போட்டியாக' களத்தில் குதித்த சீனா!