'உணவு மற்றும் வேளாண் அமைப்பின் 75வது ஆண்டு தினம்'... 'புதிய நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி'!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உணவு மற்றும் வேளாண் அமைப்பு எப்ஏஓ-வின் 75-வது ஆண்டு தினத்தைக் குறிக்கும் வகையில் ரூ.75 சிறப்பு நாணயத்தைப் பிரதமர் மோடி இன்று வெளியிட்டார். உணவு மற்றும் வேளாண் அமைப்பான எப்ஏஓ-வின் 75-வது ஆண்டைக் குறிக்கும் வகையிலும், இந்தியாவுக்கும், இந்த அமைப்புக்கும் உள்ள நீண்டகால தொடர்பைக் குறிக்கும் வகையிலும் இந்த நாணயத்தைப் பிரதமர் வெளியிட்டார்.

அதேபோன்று அண்மையில் உருவாக்கப்பட்ட உயிரி செறிவூட்டிய 8 பயிர்களின் 17 ரகங்களையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்ச்சி வேளாண்மை மற்றும் ஊட்டச்சத்து விஷயத்தில் அரசின் முன்னுரிமையைக் காட்டும் விதத்தில் அமையும். வறுமையை முற்றிலுமாக ஒழிப்பது, ஊட்டச்சத்துக் குறைபாட்டை அகற்றுவது ஆகிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் சாசனமாக, இது திகழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்