"நான்தான் சொன்னேன்.. என்கிட்டே உங்க கோபத்தை காட்டுங்க".. பிரதமர் மோடி ஓபன் டாக்.. என்ன நடந்துச்சு..?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

வாரிசு அரசியல் ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் அதனை தவிர்க்க வேண்டும் எனவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.

Advertising
>
Advertising

"ரஷ்யாவுக்கு எதிரா..நாங்க ஜெயிச்சுட்டோம்".. உக்ரைன் அதிபர் மகிழ்ச்சி.. ஓஹோ இதுதான் காரணமா?

வாரிசு அரசியல்

பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மோடி, வாரிசு அரசியல் லஞ்சம் மற்றும் ஊழலை அதிகரிக்கும் எனத் தெரிவித்தார். தொடர்ந்து பேசுகையில் அவர்," வாரிசு அரசியல் என்பது காங்கிரஸ் அல்லது வேறு ஒரு கட்சிக்கு எதிரான குற்றச்சாட்டு அல்ல. அது ஒட்டுமொத்த அரசியல் கட்டமைப்பிற்கே எதிரானது. லஞ்சம் மற்றும் ஊழலை வாரிசு அரசியல் ஊக்குவிக்கும்" எனக் கூறினார்.

5 மாநில தேர்தல்

கடந்த வாரம் நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அபார வெற்றி பெற்றது. உத்திர பிரதேசம், மணிப்பூர், கோவா மற்றும் உத்திரகாண்ட் ஆகிய நான்கு மாநிலங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கிறது பாஜக. பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றிருக்கிறது.

நான்தான் காரணம்

இந்நிலையில் வாராந்திர பாஜக எம்பிக்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி,"சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் பல எம்.பி.க்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சீட்களை ஒதுக்குமாறு கோரிக்கை வைத்தனர். அவர்களில் பலரது கோரிக்கை மறுக்கப்பட்டது. இது வாரிசு அரசியலை தோற்றுவிக்கும் என்பதால் பாஜக எம்.பி.க்களின் பிள்ளைகளுக்கு தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கப்படவில்லை. அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் போனதற்கு காரணம் நான்தான்" என்றார்.

என்மீது கோபத்தை காட்டுங்கள்

'வாரிசு அரசியலை உருவாக்கும் என்பதற்காகவே அமைச்சர்களின் பிள்ளைகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை' எனத் தெரிவித்த மோடி, "இதனால் அதிருப்தியில் உள்ள அமைச்சர்கள் என்னிடம் உங்களது கோபத்தை காட்டுங்கள். ஏனெனில் அவர்களுக்கு சீட் கொடுக்க வேண்டாம் எனக் கூறியது நான்தான்" என்றார்.

ஜப்பானை தொடர்ந்து இந்தியாவிலும் இரவு நிலநடுக்கம்.. வானிலை மையம் வெளியிட்ட தகவல்..!

PM, PM MODI, PM NARENDRA MODI, SEAT, MINISTER, CHILDRENS, STATE ELECTION, பிரதமர் நரேந்திர மோடி, மாநில தேர்தல்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்