'கொரோனா நெருக்கடி'... 'பிரதமர் மோடியின் செல்வாக்கு எப்படி இருக்கு'... பிரபல நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா நெருக்கடியில் பிரதமர் மோடியின் செல்வாக்கு எப்படி இருக்கிறது என்பது குறித்து, பிரபல நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதற்கான காரணங்களையும் அது வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவுவதற்கு முன்பு பிரதமர் மோடி, பல சவால்களை எதிர்கொண்டார். உதாரணமாக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு தழுவிய அளவில் நடைபெற்ற போராட்டங்கள், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வருகை தந்தபோதே தலைநகரில் இந்து-முஸ்லீம் கலவரம் வெடித்தது, இந்திய பொருளாதாரத்தின் வீழ்ச்சி மற்றும் லட்சக்கணக்கானோர் வேலை இழந்தது போன்றவற்றை பிரதமர் எதிர்கொண்டார்.

அதோடு கொரோனா பரவ தொடங்கியதிலிருந்து இந்திய பொருளாதரம் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 83,000 கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுகள் மற்றும் 3000 இறப்புகள் என, வல்லரசு நாடுகளை விட இந்தியாவில் எண்ணிக்கை மிகவும் குறைவு. இதனால் மோடியின் செல்வாக்கு உயர்ந்திருப்பதாக, நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ரஷ்யா அதிபர்  விளாடிமிர் புதின் ஆகியோருடன் ஆகியோருடன் ஒப்பிடப்படும் போது மோடி இந்த நெருக்கடியை நன்கு எதிர்கொள்கிறார் என அதில் கூறப்படுகிறது. இதனிடையே பிரதமர் மோடி அறிவித்த  நாடு தழுவிய ஊரடங்கு என்பது வெற்றி பெற்றிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 

பல நாடுகளில் ஆன்லைன் ஆய்வுகள் செய்யும் ஒரு அமெரிக்க நிறுவனமான மார்னிங் கன்சல்ட், மற்ற உலகத் தலைவர்களை விட மோடி நன்றாக செயல்படுவதாக கூறியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்