"இந்தியாவுக்கு கிடைத்த பெருமை".. ஆஸ்கர் விருது வென்ற இந்திய கலைஞர்கள்.. பிரதமர் மோடி வாழ்த்து..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆஸ்கர் விருதுகளை வென்ற இந்திய படைப்பாளிகளுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | "நாம சாதிச்சுட்டோம்".. ஆஸ்கர் விருதுடன் ஜூனியர் NTR.. உருக்கமான பதிவு..!
ஆஸ்கர் 2023
சினிமா கலைஞர்களின் உச்சபட்ச கனவாக இருக்க கூடியது ஆஸ்கர் விருதை வெல்வதாகத்தான் இருக்கும். உலகம் முழுவதிலும் இருந்து சிறந்த திரைபடங்களை, கலைஞர்களை அங்கீகரித்து விருது வழங்கும் விழா ஒவ்வொரு வருடமும் வெகுவிமர்சையுடன் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கினார். இதில் RRR படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் சிறந்த ஒரிஜினல் பாடலாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. அதேபோல் The Elephant Whisperers சிறந்த ஆவண குறும்பட பிரிவில் இப்படம் ஆஸ்கார் விருது வென்றுள்ளது.
நாட்டு நாட்டு
பிரபல இசையமைப்பாளர் மரகதமணி எனும் கீரவாணி இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் கோல்டன் குளோப் விருதுக்கு இரண்டு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது. இதில் சிறந்த பாடலுக்கான விருதை நாட்டு நாட்டு பாடல் வென்றது. இசையமைப்பாளர் கீரவாணி விருதை பெற்றுக் கொண்டார். அது முதல் ஆஸ்கரை வெல்லுமா நாட்டு நாட்டு பாடல்? என ரசிகர்களுக்கு மத்தியில் கேள்வி எழுந்தது. கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் ஆஸ்கர் விருதை வென்றிருக்கின்றனர்.
Images are subject to © copyright to their respective owners.
இந்நிலையில் பிரதர் மோடி எழுதியுள்ள வாழ்த்து பதிவில்,"நாட்டு நாட்டு பாடலின் புகழ் உலகளாவியது. இன்னும் பல வருடங்கள் நினைவில் நிற்கும் பாடலாக இது இருக்கும். இந்த மதிப்புமிக்க பெருமையை பெற்றுக்கொடுத்த இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் உள்ளிட்ட படக்குழுவினருக்கு வாழ்த்துகள். இந்தியா மகிழ்ச்சி மற்றும் பெருமை கொள்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
Images are subject to © copyright to their respective owners.
The Elephant Whisperers
தமிழ்நாட்டின் முதுமலையை களமாக கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் யானைகளை பராமரித்து வரும் பொம்மா மற்றும் பெல்லி என்ற தம்பதியினரின் வாழ்க்கை முறை, யானையுடனான அவர்களது பிணைப்பு குறித்து அழகியலுடன் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த படத்தை இயக்கிய கார்த்திகி கான்சால்வேஸ் மற்றும் தயாரித்த குனித் மோங்கா ஆகியோர் விருதை பெற்றுக்கொண்டார்கள்.
Images are subject to © copyright to their respective owners.
இந்நிலையில் பிரதமர் மோடி எழுதியுள்ள வாழ்த்து செய்தியில்,"கார்த்திகி கோன்சால்வ்ஸ், குனீத் மோங் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள். இந்தப் படம் நீடித்த வளர்ச்சி மற்றும் இயற்கையோடு இணைந்து வாழ்வதன் முக்கியத்துவத்தை அற்புதமாக எடுத்துரைக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read | The Elephant Whisperers : ஆஸ்கர் வென்ற இந்திய பெண்கள்.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி போஸ்ட்.. !
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ரோஹித் ஷர்மாவிற்கு தொப்பியை கொடுத்ததும்.. ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை பாராட்டிய பிரதமர் மோடி..
- இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி டெஸ்ட்.. மைதானத்தில் இருநாட்டு பிரதமர்கள்.. வைரலாகும் வீடியோ..!
- பள்ளி மாணவியின் உருக வைக்கும் பாடல்.. ரசித்து கேட்டு பாராட்டிய பிரதமர் மோடி.. வைரலாகும் வீடியோ..!
- பிரதமர் மோடி & வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி அனுப்பிய Gift..! வைரல் Pics..!
- "இப்போ இதுதான் ட்ரெண்ட்".. சப்பாத்தி செஞ்ச பில் கேட்ஸ்.. பாராட்டி பிரதமர் மோடி கொடுத்த ஹெல்த் அட்வைஸ்.. வீடியோ..!
- PADMA AWARDS : RRR இசையமைப்பாளர் கீரவாணி, KGF நடிகை ரவீனா டாண்டன் உள்ளிட்ட 106 பேருக்கு பத்ம விருதுகள்..!
- விபத்தில் சிக்கிய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்.. பிரதமர் நரேந்திர மோடியின் உருக்கமான ட்வீட்..!
- பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் சென்ற கார் விபத்து.. மைசூரில் பரபரப்பு.. முழு விபரம்..!
- குஜராத், இமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகள்.. பிரதமர் மோடி, ராகுல் காந்தி, கெஜ்ரிவால் ரியாக்ஷன் என்ன?
- "இது சரியில்ல".. கனடா பிரதமரிடம் அச்சுறுத்தும் தொனியில் பேசினரா சீன அதிபர்? வைரல் வீடியோ குறித்து சீனா பரபரப்பு விளக்கம்.! G20 Summit