"எதுக்காக டாக்டர் ஆகணும்னு ஆசைப்படுற".. பிரதமர் மோடியின் கேள்விக்கு அழுகையுடன் மாணவி சொன்ன பதில்.. கலங்கிப்போன பிரதமர்.. வைரல் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், மருத்துவராக வேண்டும் எனக்கூறிய மாணவியிடம் அதற்கான காரணத்தை கேட்டபிறகு சற்று நேரம் பிரதமர் மோடி அதிர்ச்சியுடன் அமர்ந்திருந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | பூனையால் வந்த அதிர்ஷ்டம்.. 96 லட்சத்தை வென்ற பெண்.. கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு..!

மாநாடு

குஜராத் மாநிலத்தில் அரசு திட்டங்களால் பயனடைந்தவர்களின் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காணொளி வாயிலாக மக்களுடன் பிரதமர் மோடி பேசினார். அப்போது இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அயுப் பட்டேல் என்னும் கண் பார்வையை இழந்த மாற்றுத் திறனாளி தன்னுடைய வாழ்க்கை குறித்து மோடியுடன் உருக்கமாக பேசினார்.

3 பெண் குழந்தைகளுக்கு தந்தையான அயுப், சவூதி அரேபியாவில் பணிபுரிந்துவந்தவர். அப்போது, அங்கு தவறுதலாக பயன்படுத்திய மருந்தினால் தனது பார்வையை இழந்துவிட்டதாகவும் அயுப் குறிப்பிட்டார்.

கனவு

நிகழ்ச்சியில் பேசிய அயுப்," எனக்கு மூன்று மகள்கள் இருக்கிறார்கள். மூத்த பெண் தற்போது 12 ஆம் வகுப்பு படித்துவருகிறார். அவளுக்கு மருத்துவராக வேண்டும் என்பதே கனவு" என்றார். இதனை தொடர்ந்து ஏன் மருத்துவராக வேண்டும் என மோடி கேட்க," கண்ணீருடன் பேசிய மாணவி "எனது அப்பா படும் கஷ்டங்களை நான் அருகிலிருந்து பார்த்துவருகிறேன். அதனாலேயே நான் மருத்துவராக வேண்டும் என உறுதியுடன் இருக்கிறேன்" என்றார்.

இதனை கேட்ட, மோடி சற்று நேரம் அமைதியானார். உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அமர்ந்திருந்த மோடி, "உங்கள் கருணையே உங்களது பலம்" என்றார். பின்னர் அயுப் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்த மோடி, அந்த மாணவி மருத்துவம் படிக்க உதவி செய்வதாகவும் தெரிவித்தார்.

கண்பார்வை பறிபோனதால் தனது தந்தை கஷ்டப்படுவதாகவும் அதனால் மருத்துவராக ஆசைப்படுகிறேன் என மாணவி கூறியதைக்கேட்டு பிரதமர் மோடி உணர்ச்சிவசப்பட்டு அமர்ந்திருந்த வீடியோ சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

 

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

 

 

PM MODI, OFFERS, HELP, GUJARAT GIRL, DOCTOR, பிரதமர் மோடி, மாணவி, டாக்டர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்